Relationship Tips: திருமணம் என்பது இன்றைய காலகட்டத்தில் சற்றே சிக்கலான விஷயமாக மாறி வருகிறது. ஆண் - பெண் உறவுச் சிக்கல் என்பது அனைத்து காலகட்டங்களில் இருப்பதுதான் என்றாலும் தற்போது அது வேறொரு உச்சத்திற்கு வந்துள்ளது எனலாம். தொழில்நுட்ப வளர்ச்சி, வாழ்க்கை முறை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் திருமண உறவில் தாக்கத்தை செலுத்துகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காதல் திருமணங்கள் ஒருபுறம் என்றால் பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமணம் (Arrange Marriage) என்பதும் இதைவிட பெரிய சிக்கலானதுதான். முன்பெல்லாம், தான் திருமணம் செய்யப்போகும் ஆண்/பெண் ஆகியோருக்கு என்ன பிடிக்கும், வாழ்க்கை குறித்த அவர்களின் பார்வை என்ன என எந்தவித தகவல்கள் திருமணத்திற்கு முன் தெரியாது. இதனால், திருமணத்திற்கு பின்னரும் கூட பிரச்னை வரும்.


உரையாடல் தேவை


குறிப்பாக, ஆண் ஒருவர் தான் திருமணம் செய்துகொள்ள விரும்பும் பெண் உடன், திருமணத்திற்கு முன் சில விஷயங்களை பேசி உறுதிசெய்துகொள்வது என்பது அவர்களின் உறவை பலமாக்கும். ஏனென்றால் இரண்டு பேருக்குமே ஒருவரை ஒருவர் குறித்த புரிதல் இருக்காது. இதனால் நீங்கள் திருமணம் என்ற பெரிய அமைப்பிற்குள் போவதற்கு முன் நீங்கள பார்ட்னராக விரும்புபவரிடம் சில கேள்விகளை கேட்டு, அவர்களின் பதிலை பொறுத்து உங்களின் முடிவை எடுக்க வேண்டும்.


மேலும் படிக்க | பெண்களே உஷார்! ஆண்களின் இந்தப் பழக்கங்களை புறக்கணிக்க வேண்டாம்!


அவர்கள் சொல்லும் முடிவை பொறுத்து அவர்களுடன் திருமண உறவுக்கு செல்லலாமா அல்லது வேண்டாமா என்பதை நீங்கள் முடிவு செய்யலாம். அந்த வகையில், இங்கு ஒரு ஆண்/பெண் தான் திருமணம் செய்துகொள்ள விரும்புபவர்களிடம் கண்டிப்பாக கேட்க வேண்டிய கேள்விகள் குறித்து இங்கு விரிவாக காணலாம். 


அந்த நான்கு கேள்விகள்...


- திருமணத்திற்கு முன்னரே அவர்களுக்கு பிடித்தது என்ன, பிடிக்காதது என்ன என்பதை தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டும். அவர்களின் பொழுதுபோக்குகள், சினிமா பார்ப்பது பிடிக்குமா, பயணம் செய்ய பிடிக்குமா, எந்த நிறம் பிடிக்கும் போன்ற அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொள்வது மிக அவசியம். அவர்களின் ரசனை உங்களுக்கு பிடித்துபோய்விட்டால் திருமணத்தை நீங்கள் உறுதிசெய்து கொள்ளலாம், திருமண வாழ்விலும் பிரச்னை இருக்காது. 


- நீங்கள் திருமண் செய்துகொள்ள விரும்புபவருக்கு சைவம் பிடிக்குமா அல்லது அசைவம் பிடிக்குமா என்பதை தெரிந்துகொள்வது நல்லது. வீட்டில் சாப்பிடுவதற்கோ அல்லது வெளியே ஹோட்டலுக்கு போய் சாப்பிடும்போதோ அதற்கு தகுந்தாற்போல் நீங்கள் திட்டமிட்டுக்கொள்ளலாம். தேவையற்ற பிரச்னையை இந்த கேள்வி வருங்காலத்தில் தடுக்கும். 


- மேலும், தங்களின் கணவரோ/மனைவியோ எப்படி இருக்க வேண்டும் நினைக்கிறார்கள் என்பதை நீங்கள் கேட்க வேண்டும். கல்வி, பொருளாதாரம் இதுமட்டுமின்றி திருமண உறவில் ஒருவர் எப்படி இருக்க வேண்டும், எந்தெந்த சூழ்நிலைகளில் எப்படி முடிவெடுப்பீர்கள் ஆகிய கேள்விகள் உங்களுக்கு எதிரில் இருப்பவர் குறித்த தெளிவான புரிதலையும் உங்களுக்கு கொடுக்கும் , திருமணத்திற்கான நம்பிக்கையும் உங்களுக்கு கிடைக்கும். 


- நீங்கள் திருமணம் செய்துகொள்ளப் போகிறவரிடம், அவர்களின் எதிர்கால திட்டம் என்ன என்ற கேள்வியை நீங்கள் கேட்க வேண்டும். பெண்களுக்கு சில விருப்பம் இருக்கும், ஆண்களுக்கு என சில விருப்பம் இருக்கும். ஆனால் இதை முன்னரே தெரிந்துகொள்வது நல்லது. விருப்பங்களில் வேறுபாடு இருந்தாலும் அதுகுறித்த உரையாடல் நிச்சயம் தேவை. இது உங்களின் திருமணத்தை சிறப்பாக்கும்.


முக்கியமாக இது பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமணத்திற்கு மட்டுமே... காதல் திருமணம் செய்துகொள்வோருக்கு ஏற்கெனவே அறிமுகம் இருக்கும் என்பதால் இந்த கேள்விகள் அவசியப்படாது.  


மேலும் படிக்க | பெண்கள் ஆண்களிடம் இந்த 3 தவறுகளை மட்டும் ஒருபோதும் செய்ய வேண்டாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ