ஆண்கள் ஏன் 30 வயதிற்கு மேல் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள் தெரியுமா?

Relationship Tips: ஆண்களின் திருமண வயது 21 என்றாலும், பெரும்பாலோனோர் முடிந்தவரை திருமணத்தை தள்ளி வைக்க விரும்புகின்றனர். இதற்கான காரணம் என்ன வென்று தெரிந்து கொள்ளுங்கள்.  

Written by - RK Spark | Last Updated : Jun 11, 2024, 11:23 AM IST
  • 30 வயதிற்குப் பிறகு ஆண்களுக்கு திருமணம்?
  • வேலை, பணம் மட்டுமே நோக்கம் இல்லை.
  • சில உளவியல் காரணங்களும் உள்ளன.
ஆண்கள் ஏன் 30 வயதிற்கு மேல் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள் தெரியுமா? title=

Relationship Tips: கடந்த காலங்களில் ஆண்களுக்கு 14 வயது முதலே திருமணம் செய்து வைத்துள்ளனர். காலம் மாற மாற தற்போது திருமணம் செய்து கொள்ள அடிப்படை வயது 21 என்று இருந்தாலும் பல ஆண்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புவதில்லை. 30 வயது வரை தங்களை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று குடும்பத்தினரிடம் கூறி வருகின்றனர். அதுவரையில் திருமணம் வேண்டாம் என்று தவிர்த்து வருகின்றனர். பலருக்கும் இந்த சந்தேகம் இருக்கும். ஆண்கள் ஏன் 30 வயது வரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதில்லை என்று. பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் என்னதான் வற்புறுத்தினாலும் திருமணத்தை தாமதப்படுத்துகின்றனர். இதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | மூளையை பாதிக்கும் கதிர்வீச்சு... தூங்கும் போது மொபைல் போனை தள்ளியே வைங்க..!!

 

செட்டில் ஆக விரும்புகின்றனர்

ஆண்கள் தாமதமாக திருமணம் செய்து கொள்வதற்கு முதன்மையான காரணங்களில் ஒன்று பொருளாதார சிக்கல் தான். தங்களை நிதி ரீதியாக வலுவாக வைத்து கொள்ள விரும்புகின்றனர். படித்து முடித்து வேலைக்கு சென்றால் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலையை பெற குறைந்தது 5 வருடங்கள் ஆகிறது. எனவே தான் அதற்கான காலத்தை எடுத்து கொள்கின்றனர். திருமணத்திற்கு பிறகு எதிர்காலத்தில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக காலம் தாழ்த்துகின்றனர். ஆண்களுக்கு திருமண பொறுப்புகளை ஏற்கும் முன் ஒரு நல்ல வேலை அல்லது வியாபாரத்தில் ஈடுபட நினைக்கின்றனர். 

சுதந்திரமாக வாழ விரும்பும் ஆண்கள்

திருமணம் செய்து கொண்டால் மனைவி, குழந்தைகள் என குடும்பமாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இவ்வளவு பெரிய பொறுப்புகளை உடனே ஏற்க ஆண்கள் விரும்புவதில்லை. எனவே திருமணத்திற்கு முன் முடிந்தவரை இவற்றை தள்ளி வைக்க விரும்புகின்றனர். வீடு மற்றும் குடும்பம் என்ற கட்டுப்பாடுகள் இல்லாமல், எந்தக் கவலையும் இல்லாமல் சுற்றி திரிய விரும்புகின்றனர். அதனால்தான் இப்போதெல்லாம் பெரும் பாலும் ஆண்கள் திருமணத்தை தாமதமாக செய்து கொள்கிறார்கள். மேலும் திருமணம் ஆனால் ஏற்படும் செலவுகள், பிரச்சனைகளை பார்த்து பயமும் ஒருபுறம் ஆண்களுக்கு உள்ளது. 

சரியான துணையை அமைய வேண்டும்

ஒரு சில ஆண்கள் 30 வயதிற்கு முன்னரே திருமணம் செய்து கொள்கின்றனர். வீட்டில் பார்த்த பெண்ணோ அல்லது காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்ணோ என யாராக இருந்தாலும் சில ஜோடிகள் விரைவாக பிரிந்து விடுகின்றனர். கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து விடுகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஆண்கள் தாமதமாக தனக்கு பிடித்த பெண்ணை தேடி திருமணம் செய்கின்றனர். இளம் பெண்களை திருமணம் செய்வதைவிட, வயது அதிகமாக இருந்தாலும் பக்குவமான பெண்ணாக உள்ளார்களா என்பதை பார்க்க தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக குடும்பத்தில் புரிதல் இருக்கும் என்று நம்புகின்றனர்.

மேலும் படிக்க | மதுரை டூ பத்ரி - கேதார்நாத்... IRCTC வழங்கும் பாரத் கவுரவ் யாத்திரை பேக்கேஜ்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News