பொதுவாக காதல் அல்லது திருமண உணவில் சண்டை வருவது சகஜம் தான் என்றாலும் ஆரோக்கியமான உறவை உருவாக்க இருவரிடமும் நல்ல புரிதல் தேவைப்படுகிறது. பல ஆண்டுகளாக ஒன்றாக இருந்தாலும் கூட சிறு சிறு விஷயங்கள் பெரிய பிரச்சனையாக மாற அதிக வாய்ப்புள்ளது. எந்த ஒரு உறவும் சண்டை சச்சரவுகள் இல்லாமல் இல்லை என்றாலும், ஆரோக்கியமான உறவை பராமரிக்க புரிதல் மற்றும் விட்டுக்கொடுத்து போவது அவசியம். மனரீதியாக இருவருக்கும் இடையே புரிதல் இருக்க வேண்டும். திருமண அல்லது காதல் உறவில் விரிசல் ஏற்பட்டால் அது மன அழுத்தத்தையும், அதிக கவலையையும் ஏற்படுத்தும். ஒரு உறவில் ஆண் மற்றும் பெண் இருவரிடமும் பிரச்சனைகள் உள்ளது என்றாலும், பெண்கள் தங்கள் உறவுகளில் தவிர்க்க வேண்டிய சில பொதுவான தவறுகள் உள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | காலை எழுந்ததும் மிகவும் மந்தமாக இருக்கிறதா... தினமும் இந்த 5 விஷயத்தை செய்யுங்கள்!


விதிமுறைகள் கூடாது


ஒரு உறவில் பெண்கள் செய்யக்கூடிய நிறைய தவறுகள் உள்ளன. அவற்றில் முதலாவது தங்கள் கணவர் அல்லது காதலன் எப்போதும் தங்கள் சொல்பேச்சை கேட்க வேண்டும், கேட்காமல் எந்த முடியும் எடுக்க கூடாது, திட்டங்களுக்கு இணங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தான். ஒரு உறவில் உள்ள இருவருக்கும் சொந்த முடிவுகள், திட்டங்கள் மற்றும் முன்னுரிமைகள் உள்ளது. இதனை நினைவில் கொள்வது அவசியம். இதை தவிர்த்துவிட்டு தாங்கள் சொல்வதை தான் கேட்க வேண்டும் என்று கூறுவது உறவில் சங்கடத்தை அல்லது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனை தவிர்க்க ஒரு விஷயத்தை இருவரும் உட்கார்ந்து பேசி ஒரு முடிவிற்கு வருவது நல்லது. அப்போது தான் இருவரின் பங்கும் அதில் இருக்கும். 


ஆண்களை வற்புறுத்த கூடாது


பல பெண்கள் தங்கள் கணவரின் சில செயல்களை பிடிக்காமல் மாற்ற முயற்சி செய்கின்றனர். அவர்கள் மேல் உள்ள அதீத அன்பினால் அப்படி செய்கின்றனர். ஒருவேளை தங்கள் கணவர் அந்த விஷயங்களை மாற்றி கொள்ளாத பட்சத்தில் ஏமாற்றம் அல்லது விரக்தி அடைகின்றனர். இது உறவில் ஒருவித விரிசலை ஏற்படுத்தும். ஒரு உறவில் மாற்றம் அல்லது முன்னேற்றத்தை எதிர்பார்ப்பது இயற்கையானது என்றாலும், உங்களின் துணை எப்படி இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் மாறுவார் என்று எதிர்பார்ப்பதற்கு பதில், உங்களின் எதிர்பார்புகளை அவர்களிடத்தில் வையுங்கள். 


தேவையில்லாமல் தொந்தரவு செய்ய வேண்டாம்


எந்தவொரு உறவிலும் உதவியாக இருப்பது முக்கியமானது. இது உறவை வலுவடைய செய்யும் என்றாலும், உங்கள் துணைக்கு உதவி தேவையில்லாதபோது அதை செய்ய வேண்டாம். இது போன்ற விஷயங்களில் தொடர்ந்து ஈடுபட்டால் ஒருவித எரிச்சல் ஏற்படும். பிரச்சனைகளை சரி செய்ய அல்லது தீர்வுகளை வழங்க முயற்சி செய்யும் போது அவர்களின் வேலையில் தலையிடுவது போன்ற உணர்வு ஏற்படும். இது உங்கள் கணவரின் நம்பிக்கையையும் சுதந்திரத்தையும் குறைக்க வழிவகுக்கும். எனவே அவரது பாணியில் விட்டுவிட வேண்டும். உங்களிடம் உதவி வேண்டும் என்று கேட்டால் மட்டும் தலையிடுவது நல்லது. இது உறவை வலுப்படுத்தும் மற்றும் பரஸ்பர மரியாதையை வளர்க்கும்.


மேலும் படிக்க | எவ்வளவு நட்பாக இருந்தாலும் மாமியார்களிடம் மருமகள்கள் சொல்ல கூடாத 5 விஷயங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ