காலை எழுந்ததும் மிகவும் மந்தமாக இருக்கிறதா... தினமும் இந்த 5 விஷயத்தை செய்யுங்கள்!

Morning Fatigue: பலரும் காலை எழுந்ததும் மிகவும் மந்தமாக உணர்வார்கள். அந்த வகையில், அது உடல்நிலை பிரச்னையாகவும் இருக்கலாம். ஆனால் வாழ்க்கை முறையில் சில விஷயங்களை பின்பற்றுவதால் அதனை போக்கலாம். அதுகுறித்து இதில் விரிவாக காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 18, 2024, 06:55 AM IST
  • இதற்கு உணவுப் பழக்கவழக்கம் ஒரு முக்கிய காரணமாகும்.
  • உட்கார்ந்தே இருக்கும் வாழ்க்கைமுறையால் இந்த பிரச்னை வரும்.
  • இதனால் தூக்கம் நன்றாக வராது.
காலை எழுந்ததும் மிகவும் மந்தமாக இருக்கிறதா... தினமும் இந்த 5 விஷயத்தை செய்யுங்கள்! title=

Morning Fatigue Lifestyle Tips: ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையும் ஒவ்வொரு விதமாக இருப்பதால், எந்த ஒரு கருத்தையும் பொதுவாக சொல்லிவிட இயலாது. அந்த வகையில் காலையில் மிகவும் நேரமாக எழுந்திருப்பது என்பது உடலுக்கு நன்மை தரும் என்றாலும் சிலரின் பணி நள்ளிரவை தாண்டியும் நீடிக்கும் என்பதால் அவர்களிடம் சென்று காலையில் விரைவாக எழுந்திருங்கள் என சொல்வது அபத்தமாகும். அந்த வகையில், அவர்களை தவிர அதிகாலையில் எழுந்து வேலைக்கோ, பணிக்கோ செல்பவர்களுக்கே இந்த செய்தி எனலாம். 

அதிகாலையில் சீக்கிரம் எழுந்திருப்பது சிலருக்கு பழகியிருக்கும். பலருக்கும் அது கடினமாக ஒன்றாக கூட இருக்கலாம். அந்த வகையில், காலை எழுந்ததும் சுறுசுறுப்புடன் பணிகளை தொடங்குவதே அன்றைய நாளை சிறப்பாக அமைப்பதற்கான நல்ல அடிதளமாகும். ஆனால் சிலர் காலை எழுந்ததுமே மிகவும் மந்தமாக உணர்வார்கள், அன்றாட வேலையை செய்யவே அவர்களுக்கு சக்தி இருக்காது. இது உடல்நிலை சார்ந்த பிரச்னையாக கூட இருக்கக்கூடும். 

இந்த சோர்வுநிலைக்கு பல காரணங்கள் இருக்கலாம். பலரும் சரியாக தூங்கவில்லை என ஒரு காரணத்தை கூறுவார். ஆனால் நன்றாக பல மணிநேரங்கள் தூங்கியிருந்தாலும் கூட அவர்கள் எழுந்ததும் சோர்வாக உணர்வார்கள். பல மணிநேரம் உட்கார்ந்தே வேலைப்பார்க்கும் வாழ்க்கைமுறையே இதற்கு பெரிய காரணமாகும். எவ்வித உடல் அசைவும் இல்லாதது தூக்கத்தை தரத்தையும் கெடுக்கும்.

மேலும் படிக்க | வைட்டமின் பி12 அதிகமாக எடுத்து கொண்டால் இவ்வளவு பிரச்சனைகள் ஏற்படுமா?

உணவுமுறையில் மாற்றம் தேவை

அதேபோல், மோசமான உணவுப்பழக்கம், மனக்கவலையை கவனிக்காதது உள்ளிட்டவை இந்த மந்தநிலைக்கு வித்திடும். அதுவும் வெயில் அதிகமாக இருக்கும் காலங்களில், உடலின் தட்பவெப்ப நிலை சீராக இருக்க உடலுக்கு கூடுதல் சக்தி தேவைப்படும், அதனால் கூட ஒருவர் சோர்வாக உணரலாம். இருப்பினும் உணவுப் பழக்கவழக்கத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சுறுசுறுப்பை மீட்கலாம். 

ஏனென்றால், உணவுதான் உங்களுக்கு எனர்ஜியை அளிக்கக்கூடியது. எனவே, சோர்வை தவிர்க்க ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. அந்த வகையில், உணவுப் பழக்கவழக்கத்தில் இந்த 5 விஷயங்களை செய்வதன் மூலம் சோர்வு நீங்கி, சுறுசுறுப்பு உண்டாகலாம்.

சுறுசுறுப்பாக இருக்க இதை செய்யுங்க...

- நீர்ச்சத்து: உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்திருங்கள். இது உடலுக்கு மிக மிக தேவையாகும். வெயில் காலத்தில் அதிக வியர்வை வரும் என்பதால் உடலின் எலெக்ட்ரோலைட்ஸ், நீர் ஆகியவை வெளியேறும். இதனால் உடல் மந்தமாகும், நீர்ச்சத்தும் குறையும். ஆனால் இந்த சர்க்கரை அதிகமுள்ள குடிபானங்களை குடிக்க வேண்டாம்.

- சீசனுக்கு ஏற்றது: ஒவ்வொரு சீசனுக்கும் ஏற்ற காய்கறிகள், பழங்களை அந்தந்த காலங்களில் சாப்பிடுங்கள். இயற்கை பழுத்த பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்லதாகும். இதில் நச்சுக்கள் இருக்க வாய்ப்பில்லை, உடலும் ஊட்டச்சத்தை வேகமாக உள்ளிழுத்துக்கொள்ளும். 

- வாழைப்பழம்: நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்றால் வாழைப்பழமும் முக்கிய ஒன்றாகும். அதில் ஃபைபர், பொட்டாஸியம், வைட்டமின்ஸ், கார்ப்போஹைட்ரேட்ஸ் ஆகியவை உள்ளதால் அவை உடலுக்கு சக்தியை கொடுக்கும் மூலப்பொருள்களாகும். எனவே வாழைப்பழத்தை தினமும் சாப்பிடுங்கள்.

- நட்ஸ்: முந்திரி, பாதாம் போன்ற நட்ஸ்களை தினமும் எடுத்துக்கொள்வது நல்லதாகும். உடலின் மந்தநிலையை போக்குவதற்கு இது சிறந்த வழியாகும். மேலும் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் இதில் அதிகம் இருக்கும். 

- இதை சாப்பிடாதிங்க: பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடாதீர்கள். அதில் எவ்வித ஊட்டச்சத்துகளும் இருக்காது. முழு தானியங்கள், மெலிதான புரதங்கள் ஆகியவற்றை சாப்பிடுங்கள். இதில் உடலுக்கு ஆரோக்கியமான வகையில் சக்தியை அளிக்கும்

மேலும் படிக்க | காரமான உணவுகளை அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்? இந்த பாதிப்புகள் வரலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News