72-வது குடியரசு தின விழா: இந்திய தேசியக் கொடியின் பரிணாமமும், முக்கியத்துவமும்..!
இன்று நாடு முழுவதும் 72-வது குடியரசு தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட இருக்கிறது..!
இன்று நாடு முழுவதும் 72-வது குடியரசு தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட இருக்கிறது..!
இந்திய அரசியலமைப்பு சட்டம் (Indian constitution) ஜனவரி 26, 1950 ஆம் ஆண்டு நடைமுறைக்கு அமல்படுத்தப்பட்டதில்லிருந்து, நம் நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க நாட்களில் ஒன்றாக குடியரசு தினம் (Republic day) கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று நாடு முழுவதும் குடியரசு தினமானது கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், புதுடெல்லியின் ஜன்பாத்தில் கண்கவர் அணிவகுப்பு நடைபெற உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தேசியக் கொடி ஏற்றி முழு உற்சாகத்துடனும் கொண்டாடப்பட இருக்கிறது.
குடியரசு தினத்தின் முக்கியமான பகுதி தேசிய கொடி ஏற்றுவது தான். ஆனால், தற்போதுள்ள மூவர்ண கொடியானது நமது தேசியக் கொடியாக வடிவமைக்கப்பட்ட முதல் கொடி அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த ஆண்டு 72 வது குடியரசு தினத்தை நாம் கொண்டாட இருக்கையில் (freedom movement) நமது தேசியக் கொடியின் பரிணாமம் மற்றும் முக்கியத்துவம் குறித்து இங்கு காண்போம்.
இந்திய தேசியக் கொடியை 1916 ஆம் ஆண்டு மச்சிலிபட்னத்தை சேர்ந்த பிங்காலி வெங்கய்யா என்பவர் வடிவமைத்தார். இந்த கொடியை ஜூலை 22, 1947-ல் அதிகாரப்பூர்மாக தேசியக்கொடியாக ஏற்றுக்கொள்ளப்படும் வரை நிறைய மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது.
ALSO READ | தில்லி குடியரசு தின விழாவில் கிராமிய நடனத்தில் கலக்க உள்ள நம்ம DTEA மாணவர்கள்..!
ஆகஸ்ட் 7, 1906 அன்று கொல்கத்தாவில் (Kolkata) உள்ள பார்சி பாகன் சதுக்கத்தில் (Green Park) முதன்முதலில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டபோது, சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிறங்கள் இருந்துள்ளன.
அதே 1906 ஆம் ஆண்டில் காமா, வீர் சாவர்க்கர் (Veer Savarkar) மற்றும் ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா (Shyamji Krishna Varma) ஆகியோர் கொடியின் புதிய வடிவமைப்பை அறிமுகப்படுத்தினர். பின்னர் இது பேர்லினில் நடந்த சோசலிச மாநாட்டில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த கொடி மேலே குங்குமப்பூ நிறமும், கீழே பச்சை நிறமும் கொண்டது. மேல் குங்குமப்பூ நிறப்பகுதியில் ‘சப்தரிஷி’ (Saptarishi) என்பதை குறிக்கும் வகையில் ஒரு தாமரை மற்றும் ஏழு நட்சத்திரங்கள் இருந்தன. மேலும் அந்த கொடியில் 'வந்தே மாதரம்' (Vande Mataram) என்ற சொற்களும் எழுதப்பட்டிருந்தன.
1917 ஆம் ஆண்டில், லோக்மண்ய திலக் மற்றும் அன்னி பெசன்ட் (Annie Besant & Lokmanya Tilak) என்பவர்கள் இணைந்து ஒரு புதிய கொடியை வடிவமைத்தனர். இந்த கோடியில் ஐந்து சிவப்பு மற்றும் 4 பச்சை நிறங்கள் மாறி மாறி இருக்குமாறு வடிவமைத்திருந்தனர். மேல் பச்சை மூலையில் யூனியன் ஜாக் சின்னமும் (symbol of Union Jack present), அதற்கு வலது மூலையில் ஒரு வெள்ளை பிறை மற்றும் நட்சத்திரமும் இருந்துள்ளது.
1921 ஆம் ஆண்டில் வெங்கய்யா தேசிய கொடியை மறுவடிவமைப்பு செய்தார். இது இந்தியாவின் இரண்டு முக்கிய மத சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சிவப்பு மற்றும் பச்சை நிறங்களை கொண்டிருந்தது. அப்போது விஜயவாடாவில் இருந்த மகாத்மா காந்தி (Mahatma Gandhi), இந்தியாவின் மற்ற அனைத்து சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கொடியில் வெள்ளை நிறத்தை சேர்க்குமாறு அறிவுறுத்தினார். மேலும் கொடியில் ‘ஸ்பின்னிங் வீல்’ சேர்த்து கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டார்.
ALSO READ | இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் வெளிநாட்டு சிறப்பு விருந்தனர்கள் இல்லை: MEA
1931 ஆம் ஆண்டில் வெங்கய்யா கொடியை மறுவடிவமைத்து மேலே இருந்த சிவப்பு நிறத்திற்கு பதிலாக குங்குமப்பூ நிறத்தை சேர்த்தார். வெள்ளை மற்றும் பச்சை நிறங்கள் முன்பு இருந்தது போலவே வைக்கப்பட்டது, காந்திஜியின் (Mahatma Gandhi) அறிவுறுத்தல்படி கொடியின் மத்தியில் சக்கரம் வைக்கப்பட்டது. இருப்பினும், 1947-ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட இறுதிக் கொடியில், ஸ்பின்னிங் வீல் (Spinning Wheel) சின்னத்திற்கு பதிலாக அசோகச் சக்கரம் தேசிய கொடியின் வெள்ளை பகுதியில் சின்னமாக மாற்றப்பட்டது.
இறுதியாக தற்போதுள்ள கொடியை அரசியலமைப்பு சபை ஜூலை 22, 1947 அன்று சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடியாக ஏற்றுக்கொண்டது. தற்போதுள்ள கொடியில் மேலே உள்ள குங்குமப்பூ வண்ணம் நாட்டின் வலிமையையும், தைரியத்தையும் குறிக்கிறது. நடுவில் உள்ள வெள்ளை நிறம் மற்றும் அசோகச் சக்கரம் (Ashoka’s Dharma Charkha) அமைதியையும், உண்மையையும் குறிக்கிறது. கீழே உள்ள பச்சை நிறமானது நிலத்தின் வளர்ச்சி மற்றும் புனிதத்தன்மையை குறிக்கிறது.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR