தில்லி குடியரசு தின விழாவில் கிராமிய நடனத்தில் கலக்க உள்ள நம்ம DTEA மாணவர்கள்..!

கனவுகளின் மீது நம்பிக்கை வைத்தால் அந்தக் கனவுகள் நனவாகி எதிர்காலம் நம் வசப்படும் என்ற எலினோர் ரூஸ்வெல்ட் அவர்கள் கூறியதற்கு ஏற்ப, தில்லி தமிழ் கல்வி கழகத்தை சேர்ந்த மாணவர்களின் கனவுகள் நிறைவேறப்போகிறது.

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 22, 2021, 11:19 PM IST
  • DTEA பள்ளி மாணவர்கள், 25 ஆண்டுகளுக்கு பிறகு குடியரசு தின விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.
  • குடியரசு தின விழா நிகழ்ச்சி தொலைக்காட்சிகளில் 9 மணி முதல் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.
  • மொத்தம் 127 மாணவர்களின் இந்த, கலை நிகழ்ச்சியை தமிழ் கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட கிராமிய நடனத்தை கண்டு ரசிக்கலாம்
தில்லி குடியரசு தின விழாவில் கிராமிய நடனத்தில் கலக்க உள்ள நம்ம DTEA மாணவர்கள்..!

Republic Day Celebrations 2021: கனவுகளின் மீது நம்பிக்கை வைத்தால், அந்தக் கனவுகள் நனவாகி எதிர்காலம் நம் வசப்படும் என்ற எலினோர் ரூஸ்வெல்ட்  அவர்கள் கூறியதற்கு ஏற்ப, தில்லி தமிழ் கல்வி கழகத்தை சேர்ந்த மாணவர்களின் கனவுகள் நிறைவேறப்போகிறது.

குடியரசு தின விழாவையொட்டி ஆண்டுதோறும் டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சியில் நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் பங்கேற்பது வழக்கம். அந்த வகையில், வரும் ஜனவரி 26 ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில், தில்லி தமிழ் கல்விக் கழகம் சார்பில் மாணவ-மாணவிகள் கலந்துக்கொள்கிறார்கள்.

DTEA பள்ளி மாணவர்கள், 25 ஆண்டுகளுக்கு பிறகு தில்லியின் ராஜபாதையில் நடக்க இருக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்கள் திறமையை வெளிக்காட்ட இருக்கிறார்கள். குடியரசு தின விழா நிகழ்ச்சி தொலைக்காட்சிகளில் 9 மணி முதல் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.

நாட்டின் 62வது குடியரசு தின விழாவை (Republic Day) முன்னிட்டு 85 மாணவிகள் மற்றும் 42 மாணவர்கள் பாரம்பரிய கிராமிய நடனங்கள் ஆடி விழாவை சிறப்பிக்க உள்ளனர். தமிழ் கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட, இந்த கிராமிய நடன கலை நிகழ்ச்சியில் மொத்தம் 127 மாணவர்கள் கலந்துக்கொண்டு, தமிழ் நாட்டுக்கு பெருமை சேர்க்க உள்ளனர். நீங்களும் அதை கண்டு ரசிக்கலாம்.

பெருமைமிகு கிராமிய நடனங்களான சிலம்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், காவடி ஆட்டம், மயிலாட்டம் ஆகியவற்றை கண்டுகளிக்கலாம். மேலும் டெல்லியில் வசிக்கும் தமிழ் மாணவ-மாணவிகளின் திறமையை காண, இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

உலகமே, சர்வதேச அளவிலான பெரும் தொற்று நோயான கொரோனாவுடன் (COVID-19) போராடிக் கொண்டிருக்கையில், தில்லியின் தமிழ் கல்வி கழகத்தை சேர்ந்த இந்த மாணவர்கள், கடின உழைப்பு மற்றும் அயராத அர்ப்பணிப்புடன், பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.

அனைத்து தடைகளையும் தாண்டி மாணவர்கள் பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி, தமிழ் நாட்டையும் (Tamilnadu) அதன் கலாச்சாரத்தை எடுத்துக் காட்டுவதில் வெற்றி அடைந்துள்ளனர். இவர்களின் நடன நிகழ்ச்சி வரும் ஜனவரி 26 ஆம் தேதி நடக்கும் அணிவகுப்பில்,  அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு பின்னால், சரியாக காலை 10.57 மணிக்கு, பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளில் முதல் நிகழ்ச்சியாக, நம்ம தில்லி தமிழ்க் கல்விக் கழக மாணவர்களின் நிகழ்ச்சி நடக்கும்.

தில்லி தமிழ் கல்விக் கழக பள்ளிகளின் (DTEA) பழம் பெருமையை மீட்டெடுக்கும் முயற்சிகளில், இது ஒரு சிறிய துளி எனக்கூறலாம். இந்தக் கலை நிகழ்ச்சியை கண்டு களித்து பெருமிதம் அடைய வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

“முன்னுக்கு பாதையில் செல்ல உன்னை தயார்படுத்திக் கொள்ளும் போது, நீ அடைந்த இலக்குகளின் வெற்றிகளை நினைவுகூர்ந்து கொண்டாடு” என்ற நெல்சன் மண்டேலா-வின் இந்த வரிகள் பள்ளி மாணவர்களுக்கு சரியாக பொருந்துகிறது. 

தலைநகர் தில்லியில் தில்லி தமிழ்க் கல்விக் கழகம் 97 ஆண்டுகளாக கல்விப் பணியில் ஈடுபட்டு வருகிறது. DTEA மூலம் ஏற்கனவே ஏழு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 1975 ஆம் ஆண்டு ஜனக்புரி பகுதியில் தொடங்கப்பட்ட DTEA பள்ளிக்குப் பிறகு 45 ஆண்டுகள் கழித்து, கடந்த ஆண்டு மயூா்விகார் ஃபேஸ்3-இல் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய DTEA பள்ளியின் எட்டாவது கிளை திறக்கப்பட்டது.

ALSO READ | குடியரசு தினவிழாவில் கலை நிகழ்ச்சிகள் ரத்து: தமிழக அரசு

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News