புல்லட் பைக் 18,700 ரூபாய் மட்டுமே... அதுவும் தள்ளுபடில - எங்ககிட்ட ரசீது இருக்கு!
Royal Enfield Classic 350 : ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக்கின் விலை 18, 700 ரூபாய்தான் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?. ஆனால், எங்களிடம் அதற்கு ஆதாரமாக அதன் பில் உள்ளது.
Royal Enfield Classi 350 : நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்பு மக்கள் பல ஆண்டுகளாக ராயல் என்ஃபீல்டு புல்லட் கிளாசிக் 350 cc பைக்கை வைத்துள்ளனர். ராயல் என்ஃபீல்டு பைக் நாட்டின் மிகவும் பிரபலமான பைக்குகளில் ஒன்றாகும். இந்த 350 cc பைக், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மிக நீண்ட கால மாடல் ஆகும்.
பழம்பெருமை வாய்ந்த இந்த பைக்கை வாங்குவது பலரின் ஆசையாக இருந்து வருகிறது. புல்லட்டின் சத்தத்தை வைத்த அதனை அடையாளம் கண்டுவிடலாம். சொல்லப்போனால் புல்லட் பைக்குக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 cc காலத்திற்கு ஏற்றவாறு சில தொழில்நுட்ப மாற்றங்களுக்கு உட்பட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதன் தோற்றத்தையும், சில தனித்துவ அம்சங்களை மட்டும் அப்படியே வைத்திருக்க முயற்சித்து வருகின்றனர்.
ராயல் என்ஃபீல்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, 'ஆல் நியூ கிளாசிக் 350' பைக்கின் விலை ரூ. 2.2 லட்சத்தில் தொடங்குகிறது. ஆனால் இந்த பைக்கின் விலை ஒரு காலத்தில் ரூ. 18,700 என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா... கொஞ்சம் விசித்திரமாகத் தோன்றினாலும், அதற்கான ஆதாரம் தற்போது கிடைத்துள்ளது.
1986ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதியிடப்பட்ட ஒரு பைக்கின் பில் தற்போது இணையத்தில் வைரலாக பரவி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதை விண்டேஜ் பைக் ஆர்வலரான பீயிங் ராயல் என்பவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். ஒரு புல்லட் பைக்கின் விலை ரூ. 18,700 என்று அந்த பில்லில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பில் சுமார் 36 ஆண்டுகள் பழமையானது. அந்த பில், தற்போதைய ஜார்கண்ட் மாநிலம் பொகாரோவில் சந்தீப் ஆட்டோ கம்பெனி என்ற வியாபாரி மூலம் வழங்கப்பட்டது.
அப்போது அந்த பில்லில், சாதரணமாக என்ஃபீல்டு புல்லட் என்று மட்டும்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 250 தள்ளுபடி செய்ததையும் பில்லில் குறிப்பிட்டுள்ளனர். அந்த காலக்கட்டத்தில், இந்திய ராணுவ அதிகாரிகள் எல்லைகளில் கண்காணிப்பை மேற்கொள்ளவே புல்லட் பைக்கை பயன்படுத்தி வந்துள்ளனர். அந்த பில்லின் புகைப்படத்தை பகிர்ந்ததில் இருந்து அதற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
அந்த பில்லின் புகைப்படத்தின் கமெண்ட் ஒருவர்,"என்னிடம் 1984ஆம் ஆண்டு பிப்ரவரியில் 16, 100 ரூபாய்க்கு புல்லட் பைக் வாங்கிய பில் உள்ளது. இன்னும் 38 ஆண்டுகளாக அது என்னுடைய துணையாகவே உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
"1980 ஆம் ஆண்டு மினெர்வா திரையரங்கிற்கு எதிரே உள்ள கிராண்ட் ரோடு மும்பையில் உள்ள டீலரான அலி பாய் பிரேம்ஜியிடம் இருந்து 1980ஆம் ஆண்டு, 10, 500 ரூபாய்க்கு ஒரு புல்லட்டை வாங்கினோம்!!!" என்று மற்றொரு பயனர் கமெண்டில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | 2023 ஸ்பெஷல் ரீசார்ஜ்..தினமும் 2.5ஜிபி, இப்படி ஒரு ஆஃபரா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ