தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் தனி இடத்தை பிடித்த நடிகைகளுள் ஒருவர் சாய் பல்லவி. இவருக்கு, குறிப்பாக தமிழ் நாட்டில் பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். பெரும்பாலும் மேக்-அப் போடாமல் இயற்கை அழகை பேணுபவர் சாய் பல்லவி. இவர், தனது பியூடி டிப்ஸை ஒருமுறை சாய் பல்லவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதன் மூலம் ரசிகர்களுக்கு சில அழகு குறிப்புகளை கூறினார். அவை என்னென்ன தெரியுமா?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

“நல்லதை சாப்பிடுங்கள்”


துரித உணவுகளையும் வெளி உணவுகளையும் அதிகம் சாப்பிடாதவர், சாய் பல்லவி. அதிக எண்ணெய் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் முகத்தில் ஆக்னே, பிம்பிள் போன்ற அபாயம் வரக்கூடும். இதை தவிர்க்கும் வகையில் சாய் பல்லவி வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளையே சாப்பிடுவாராம். தனது பழக்க வழக்கங்கள் குறித்து ஒரு முறை பேசிய அவர், “நான் எப்போதும் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளைத்தான் சாப்பிடுவேன். அந்த உணவுகள் என்னுடைய வெளி அழகினை மட்டுமன்றி உள்ளிருந்தும் எனக்கு அழகினை கூட்டுகிறது. இதுதான் நான் பொலிவுடன் இருக்க காரணம்” என்று கூறினார். இதனால் தனது ரசிகர்களுக்கும் நல்லதையே சாப்பிடுங்க என அறிவுரை கூறுகிறார் சாய் பல்லவி. 


“தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்..”


உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்கு மட்டுமன்றி மன உறுதிக்காகவும் மனநலத்தை பேணி பாதுகாப்பதற்காகவும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். சாய் பல்லவி தனது உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க தினமும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வாராம். இதனால், உடலை ஆரோக்கியமாகவும் மனதை திடமாகவும் வைத்துக்கொள்ள முடியும் என உறுதியளிக்கிறார் சாய் பல்லவி. 


மேலும் படிக்க | மனதை மயக்கும் மலர் டீச்சர் - சாய் பல்லவியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்


“நீர்சத்து நிறைவாக இருக்க வேண்டும்..”


உடலில் உள்ள நீர்சத்தின் அளவு குறைந்தாலே நோய் தாக்கும் அபாயம் அதிகமாகிவிடும். அதுமட்டுமன்றி, நமது சருமத்தில் உள்ள டாக்ஸின் அளவுகளை குறைக்கவும் சருமத்தின் வறட்சியை போக்கவும் உடலில் நீர்சத்து இருப்பது அவசியம். இதை நன்கு அறிந்திருக்கும் சாய் பல்லவி, நிறைய தண்ணீர் குடிப்பாராம். 



செயற்கை அழகு சாதனங்களை தவிர்த்தல்


சாய் பல்லவி, பெரும்பாலும் செயற்கை அழகு சாதன பொருட்களை பயன்படுத்த மாட்டார். எந்த சினிமா நிகழ்ச்சிகளுக்கு வந்தாலும், எப்பேற்பட்ட ஹீரோவுடன் நடித்தாலும் மிகவும் குறைவாகவோ அல்லது மேக்-அப் இல்லாத லுக்கிலோ தான் இருப்பார் சாய் பல்லவி. இதையே, அவரது ரசிகைகள் பலரும் பின்பற்றுகின்றனர். சாய் பல்லவியை பலருக்கும் பிடிப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகின்றது. 


கேச அழகிற்கு


சாய் பல்லவியின் முடி, மிக நீளமாகவும் அடர்த்தியாகவும் காணப்படும். கார்குழல் போல கருப்பாக இருக்கும் அவரது முடி போல தனக்கும் வேண்டுமென பல ரசிகைகள் அவரிடம் ஹேர்-கேர் குறித்து கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த சாய் பல்லவி, தான் 3 நாட்களுக்கு ஒரு முறை தலைக்கு குளிப்பதாக தெரிவித்தார். தனது கேசத்திற்கு கற்றாழை ஜெல்லை தவராமல் உபயாேகிப்பாராம் சாய் பல்லவி. 


“அழகை பற்றி கவலை கொள்ளாதீர்கள்..”


நமது உடலில் உள்ள சிறுசிறு குறைகள்தான் நம்மை தனித்துவமாக்குகிறது என சாய் பல்லவி மட்டுமல்ல பல நடிகைகள் இதற்கு முன்னர் கூறியது உண்டு. முகத்தில் அடிக்கடி முகப்பருக்கள் வருவதை தான் எப்போதுமே பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை என கூறுகிறார் சாய் பல்லவி. அது போலவே அனைவரும் தங்களது குறைகளையும் நேசிக்க வேண்டும் என நினைப்பவர் இவர். 


மேலும் படிக்க | சாய் பல்லவி பளபளப்பாகவும், ஸ்லிம்மாகவும் இருப்பதற்கான சீக்ரெட் இதுதானாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ