Cold Remedies: சம்மரிலும் சளி பிடிக்குதா? அதை சட்டென சரிசெய்யும் வீட்டு வைத்தியங்கள் இதோ!

சளி-இருமலை சரி செய்ய சில வீட்டு வைத்தியங்கள்.  

Written by - Yuvashree | Last Updated : May 8, 2023, 06:16 PM IST
  • சிலருக்கு வெயில் காலத்திலும் பயங்கரமாக சளி பிடிக்கும்.
  • இருமல் சளியை போக்கும் எளிய வீட்டு மருந்துகள்.
  • துளசி, இஞ்சி, தேன் போன்றாவை தொண்டை புண் சரிசெய்ய உதவும்.
Cold Remedies: சம்மரிலும் சளி பிடிக்குதா? அதை சட்டென சரிசெய்யும் வீட்டு வைத்தியங்கள் இதோ! title=

பலருக்கு சளி இருமல் அவ்வப்போது வரும் விருந்தாளி. இன்னும் சிலருக்கோ அது ஒட்டி பிறந்த இரட்டை சகோதரன் போன்றது. மழை-குளிர் காலங்களில் மட்டுமல்ல, வெயில் காலம் வந்தாலும் சிலருக்கு ஜலதோஷம் பிடிக்கும். இதை தற்காலிகமாக நிவர்த்தி செய்ய சில வீட்டு வைத்தியங்கள் இருக்கிறது. அவை என்னென்ன தெரியுமா? 

வீட்டு வைத்தியங்கள்

தொண்டை வலி என்றால் மிளகு ரசமும், தலை வலியென்றால் சுடுநீரில் ஆவி பிடிப்பதும் நம்மில் பலர் வழிவழியாக கடைபிடிக்கும் வழிமுறைகள். இயற்கையான ஆயுர்வேத வீட்டு வைத்தியங்களை பின்பற்றுவோர், பலரைக்காட்டிலும் சிறந்த வலிமையுடன் விளங்குவார்கள் என சில தரவுகள் கூறுகின்றன. அப்படி சளி-இருமல் மற்றும் ஜலதோஷத்தை சரிசெய்யும் வீட்டு வைத்திய முறைகளை பார்க்கலாம். 

தேன்

தேன், அதிக நோய் எதிர்ப்பு சக்திகளை கொண்டது. இது, டேஸ்ட் பட்ஸ் எனப்படும் நமது சுவை மெட்டுகளை இனிமையாக்குகிறது. தேன் சாப்பிடுவதனால் நமக்கு ஏற்பட்ட தொண்டை வலி குறையும். இருமலுக்கும் தேன் ஒரு அற்புதமான மருந்து. 

தேனை எப்படி பயன் படுத்துவது?

சளி-இருமல் அதிகமாக இருந்தால் இரவில் படுக்க போகும் முன் ஒரு டீ-ஸ்பூன் தேனை குடிடக்கலாம். இது, இருமலிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. மேலும், தேனை இஞ்சி சாற்றில் கலந்து ஒரு சிட்டிகை மிளகு சேர்த்து அப்படியே சாப்பிடலாம். இது, தொண்டையில் ஏற்பட்டுள்ள புண் சரியாக உதவும். தேன், சரிமான கோளாறு ஏற்படாமல் இருக்கவும் உணருகிது. 

துளசி

ஆயுர்வேதத்தின் ராணி என அழைக்கப்படும் மூலிகை, துளசி. சளிக்கு எதிராக போராடும் தன்மையை அதிகமாக கொண்டுள்ள தன்மைகளை உடையது துளசி. 

எப்படி உபயோகிக்கலாம்

சளி-இருமலின் போது மட்டுமன்றி, துளசியை தினமும் காலையில் சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளை பயக்கும். தினமும் 4-5 துளசி இலைகளை சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என மருத்துவ நிபுணர்கள் உறுதி அளிக்கின்றனர். துளசியை, தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து ஒரு டீஸ்பூன் இஞ்சி மற்றும் மிளகுதூள் சேர்த்து கருப்பு உப்ப சேர்த்து, சிறிதளவு எலுமிச்சை பழத்தை பிழிந்து விட்டு குடிக்கலாம். இது, தொண்டை புண் சரிசெய்ய உதவும்.

மேலும் படிக்க | குறைந்த வட்டியில் கிடைக்கும் PPF மீதான கடன்! விண்ணப்பிக்கும் முறை!

கருமிளகு தேனீர்

தேனீரை சர்க்கரை போட்டு மட்டுமல்ல, மிளகு போட்டும் குடிக்கலாம். இது, சளி மற்றும் இருமலுக்கு மிகவும நல்லது. கருமிளகு டீ குடிப்பது தொண்டை வலியை குறைக்க உதவும். ஒரு கப் சுடுநீரில் இரண்டு ஸ்பூன் தேன், சிறிதளவு மிளகு சேர்த்து அப்படியே முடிவைத்து 15 நிமிடங்களுக்கு பிறகு எடுத்து குடிக்கலாம். 

மஞ்சள் போட்ட பால்

நன்கு காய்ச்சிய பாலில், மஞ்சள் சேர்த்து குடிப்பது சளியை உடலில் இருந்து போக்கும். பால்-மஞ்சளில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. சளி இல்லாத நாட்களில் கூட நம் உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்வது நல்லது. 

இஞ்சி

வறட்டு இருமலை போக்குவதற்கு சிறந்த மருந்து, இஞ்சி. சின்ன துண்டு இஞ்சியை எடுத்து உப்பை தூவி சில நிமிடங்களுக்கு வாயில் போட்டு மெல்லுங்கள். இஞ்சியோடு சிறிதளவு துளசி சேர்த்து மென்றால் சளியை விரைவில் நீக்க உதவும். 

மேலும் படிக்க | வயதில் மூத்த பெண்களை விரும்பும் மெஜாரிட்டி ஆண்கள்... ஏன் தெரியுமா

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News