இந்த ஆண்டு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் salary hike, bonus கிடைக்கும்: ஆய்வு
தொற்றுநோய் காரணமாக கடந்த ஆண்டு 62 சதவீத நிறுவனங்கள் மட்டுமே ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை வழங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுநோயின் விளைவுகளிலிருந்து இந்தியா மீண்டுகொண்டிருக்கின்றது. இந்த நிலையில் மக்களுக்கு ஒரு நல்ல செய்தியும் வந்துள்ளது. ஐ.டி சேவை நிறுவனமான காக்னிசண்ட் தனது ஊழியர்களுக்கு பெரிய அளவிலான போனசை அளிப்பதோடு 24,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு பதவி உயர்வுகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளது. மேலும், 2021 ஆம் ஆண்டின் ஜூன் காலாண்டில் தொடங்கி, மூத்த அசோசியேட் மட்டத்திலும் அதற்குக் கீழும் உள்ள ஊழியர்களுக்கான காலாண்டு பதவி உயர்வு சுழற்சியை செயல்முறைப்படுத்த நிறுவனம் முயற்சித்து வருகிறது.
காக்னிசண்ட் இந்தியா தலைவரும் நிர்வாக இயக்குநருமான ராஜேஷ் நம்பியார் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது தங்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக நிறுவனத்தின் செயல்திறனை விட மேலான போனஸ் மற்றும் 2019 ஐ விட கணிசமாக உயர்வை நிறுவனம் வழங்குவதாகத் தெரிவித்தார்.
கோர்ன் ஃபெர்ரி சர்வே
2020 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 6.9 சதவீதத்தை ஒப்பிடுகையில், 2021 ஆம் ஆண்டில் ஊழியர்களுக்கு சராசரியாக 7.9 சதவீத சம்பள உயர்வு வழங்க இந்தியா இன்க் திட்டமிட்டுள்ளது என்று எகனாமிக் டைம்ஸ் உலகளாவிய நிறுவன ஆலோசனை நிறுவனமான கோர்ன் ஃபெர்ரி நடத்திய ஆய்வில் மேற்கோளிட்டுள்ளது. இந்த ஆண்டு 78 சதவீத நிறுவனங்கள் சம்பள உயர்வு (Salary Hike) வழங்க திட்டமிட்டுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் காரணமாக கடந்த ஆண்டு 62 சதவீத நிறுவனங்கள் மட்டுமே ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை வழங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு 4.4 அதிகரிப்பு இருக்கும் என டெலாய்ட் கணித்துள்ளது.
இதற்கிடையில், டெலோயிட் டூச் தோமட்சு இந்தியா கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில், சம்பள உயர்வு, சென்ற ஆண்டு இருந்த 4.4 சதவீதத்திலிருந்து 2021 ஆம் ஆண்டில் 7.3 சதவீதமாக அதிகரிக்கும் என்று கூறியுள்ளது.
ALSO READ: Life Insurance term plan ஏப்ரல் 1 முதல் 10 சதவிகிதம் அதிகரிக்கக்கூடும்: காரணம் இதுதான்!!
நிறுவனங்கள் இந்த ஆண்டு இரட்டை இலக்க அதிகரிப்பை வழங்க திட்டமிட்டுள்ளனவா?
டெலோயிட் கணக்கெடுப்பு 20 சதவீத நிறுவனங்கள் (Companies) இந்த ஆண்டு இரட்டை இலக்க ஊதிய உயர்வை வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட 2020 இல் 12 சதவீத நிறுவனங்கள் மட்டுமே இரட்டை இலக்க ஊதிய உயர்வை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 60 சதவீத நிறுவனங்கள் மட்டுமே கடந்த ஆண்டு தங்கள் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை வழங்கியுள்ளதாகவும், அவற்றில் மூன்றில் ஒரு பங்கு ஆஃப்-சுழற்சி முறையில் ஊதிய உயர்வுகளை அளித்ததாகவும் கணக்கெடுப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த துறை அதிகபட்ச / குறைந்தபட்ச அதிகரிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது?
டெலோயிட் இந்தியாவின் அறிக்கை லைஃப் சைன்சஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் (IT Sector) அதிகபட்ச சம்பள உயர்வு வழங்கப்படலாம் என்று கணித்துள்ளது. விருந்தோம்பல், ரியல் எஸ்டேட், உள்கட்டமைப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்களில் இந்த ஆண்டு குறைந்தபட்ச சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ: இன்று முதல் மாற உள்ள புதிய மாற்றங்கள் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்..!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR