AR முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'சர்கார்'. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் இந்த படத்தின் First Look போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அத்துடன் இப்படத்தின் WorkingStills-னை படக்குழுவினர் தினம் ஓன்று விதத்தில் வெளியிட்டு சார்கார் Fever-னை ரசிகர்களிடையே உண்டாக்கி வந்தனர்.


இந்நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் சர்கார் கொண்டாட்டம் என்ற பெயரில் அதிரடி அறிவிப்பை ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அதில், வரும் 24-ம் தேதி (இன்று) சர்கார் படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. இந்த First single இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பு வெளியானது முதல் என்ன பாடல் வெளியாகப் போகிறது என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.