Saturn transit 2023; சனி பெயர்ச்சியால் பணக்கார யோகம்..! 4 ராசிகளுக்கு ஜாக்பாட்
சனி பெயர்ச்சி பலன்கள் காரணமாக 4 ராசிக்காரர்களுக்கு பணம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டப்போகிறது. அவர்களுக்கு அடிக்கப்போகும் இந்த ஜாக்பாட்டால் எந்த நேரத்திலும் பணக்காரர்களாக மாறுவார்கள்.
இந்த புத்தாண்டு சனிப்பெயர்ச்சியுடன் தொடங்க இருக்கிறது. இது ஒரு சிலருக்கு பணக்காரர்களாக மாறப்போகும் ராஜயோகமும், மெகா ஜாக்பாட்டையும் கொடுக்க இருக்கிறது. அந்த ராஜயோக பலனால் 4 ராசிக்காரர்கள் எந்த நேரமும் பணக்காரர்களாக மாறப்போகும் யோகம் இருக்கிறது. சனி பகவானைப் பொறுத்தவரை அவரின் மாற்றம் 12 ராசிகளிலும் எதிரொலிக்கும். இந்த முறை, அதாவது 30 ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய சொந்த வீடான கும்பதிற்கு செல்ல இருக்கிறார். அவரின் இந்த பிரவேசத்தால் 4 ராசிக்காரர்களுக்கு அமோக பலன்கள் கிடைக்கப்போகிறது.
மகர ராசியில் சனி பகவான்
தற்போது மகர ராசியில் இருக்கும் சனி 2023 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி கும்ப ராசிக்குள் நுழைகிறார். சனி கும்ப ராசியில் பிரவேசித்தவுடன் மீன ராசியில் சடசதியின் முதல் கட்டமும், கடகம், விருச்சிகம் உள்ளவர்களுக்கும் சனியின் தாக்கம் தொடங்கும்.
மேலும் படிக்க | 30 வருடத்திற்கு பின் கும்பத்தில் சனி; நிம்மதி பெருமூச்சு விடும் ‘சில’ ராசிகள்!
ரிஷபம்
இதுவரை காரியங்களில் இருந்து வந்த தடைகள் சனி சஞ்சரித்தவுடன் விலகும். சனியின் சஞ்சாரம் உங்களுக்கு பெரிய பதவியைத் தரும். வருமானமும் அதிகரிக்கும். வேலை செய்பவர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். காதல் வாழ்க்கைக்கும் நேரம் நன்றாக இருக்கும். திருமணத்திற்கான வலுவான வாய்ப்புகள் இருக்கும்.
மிதுனம்
சனியின் ராசி மாற்றம் மிதுன ராசிக்காரர்களுக்கு நிம்மதியைத் தரும். மன அழுத்தம் நீங்கும். சனி தயவால் இதுவரை இருந்த தொல்லைகள் நீங்கும். தொழிலுக்கு நல்ல காலம் தொடங்கும். தொழிலதிபர்கள் பெரும் வெற்றி பெறலாம். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும்.
துலாம் ராசி
துலாம் ராசிக்காரர்களுக்கு சனியின் சஞ்சாரம் மிகவும் அனுகூலமாக இருக்கும். முன்னேற்றப் பாதை திறக்கும். செயல்களில் வெற்றி உண்டாகும். பொருளாதார ஆதாயம் உண்டாகும். பதவி உயர்வு கிடைக்கும். மரியாதை அதிகரிக்கும்.
தனுசு ராசி
தனுசு ராசிக்காரர்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு விடுதலை பெறுவார்கள். இத்துடன் அவர்களின் துன்பங்களும் நீங்கும். பணமும் லாபமும் உண்டாகும். நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும்.
மேலும் படிக்க | இந்த ஆண்டின் கடைசி பெயர்ச்சி! கிரகங்களின் இளவரசர் தனுசில் வக்ரப் பெயர்ச்சி
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ