இந்த ஆண்டின் கடைசி பெயர்ச்சி! கிரகங்களின் இளவரசர் தனுசில் வக்ரப் பெயர்ச்சி

Mercury Retrograde Transit: இந்த ஆண்டு இன்னும் சில நாட்களில் முடியவிருக்கும் நிலையில், புதன் கிரகத்தின் இறுதி வக்ர பெயர்ச்சி 2022இன் இறுதி நாளில் நிகழவிருக்கிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 21, 2022, 04:57 PM IST
  • தாக்கத்தை ஏற்படுத்தும் புதனின் வக்ர சஞ்சாரம்
  • 2022ஆம் ஆண்டின் கடைசி பெயர்ச்சி
  • இந்த ஆண்டு புதன் கிரகத்தின் இறுதி வக்ர பெயர்ச்சி
இந்த ஆண்டின் கடைசி பெயர்ச்சி! கிரகங்களின் இளவரசர் தனுசில் வக்ரப் பெயர்ச்சி title=

கிரகங்களின் இளவரசனான புதன் கிரகத்தின் பெயர்ச்சியால் யாருக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை தெரிந்துக் கொள்வோம். ஆண்டின் இறுதியில், நவகிரகங்கள் அனைத்திலும் இறுதியாக நடைபெறவிருப்பது புதன் கிரகத்தின் இந்தப் பெயர்ச்சி. புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் புதனின் வக்ர சஞ்சாரத்தால் சிலருக்கு நன்மைகள் என்றால், சிலருக்கு நேரம் மோசமாகும். \2022, 31 டிசம்பர் நள்ளிரவு 12:58 மணிக்கு இந்த பெயர்ச்சி நடைபெறும் என்பதால், புதனின் இந்த பெயர்ச்சி, 2022ஆம் ஆண்டின் இறுதி பெயர்ச்சியாகும். 

தனுசு ராசியில் புதன் வக்ர பெயர்ச்சியாக சஞ்சரிப்பதன் தாக்கம், 12 ராசிகளிலும் எதிரொலிக்கும். புதன் வக்ர பெயர்ச்சியால் பாதிப்படையும் ராசிகள் இவை

மேலும் படிக்க | 30 வருடத்திற்கு பின் கும்பத்தில் சனி; நிம்மதி பெருமூச்சு விடும் ‘சில’ ராசிகள்!

மேஷம்
மேஷ ராசியனருக்கு சிக்கல்களை ஏற்படுத்தும் புதன் வக்ரப் பெயர்ச்சி இது. தொழில் மற்றும் பணியில், போட்டியாளர்களிடமிருந்து எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும்.  ஈகோ தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தனுசு ராசியில் சஞ்சரிக்கும் புதன், தூக்கத்தைக் கெடுக்கலாம், சிலருக்கு மன அழுத்தம் ஏற்படலாம்.கவனமாக இருந்தால், நல்லது நடக்கும். 

ரிஷபம்
வருமானத்திற்கு ஆதாரமான வேலையில் சிக்கலை ஏற்படுத்துவார் புதன். புதன், தனுசு ராசியில் வக்ரம் ஆவதால், வேலையில் தாமதம், எதிர்பார்த்த பதவி உயர்வு தள்ளிப்போவது என மன வருத்தம் ஏற்படும். காதலர்கள் பிரிந்து போகும் சூழல்களும் வரலாம்.

மேலும் படிக்க | 2023 வருட பலன்: பட்ட கஷ்டம் போதும்... நிம்மதி பெருமூச்சு விடும் தனுசு ராசிக்காரர்கள்!

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு  பணிச்சுமையும், அழுத்தமும் அதிகரிக்கும். வேலை இடத்தில் தடைகளும், வாக்குவாதங்களும் அதிகரிக்கும்.மன அழுத்தத்துடன் இருக்க வேண்டியிருக்கலாம். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறுவதற்காக அதிக சிக்கல்களை சநதிக்க வேண்டியிருக்கும். படிப்படியாக தாயின் ஆரோக்கியம் மேம்படும். தந்தையுடனான உறவு மோசமடைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

பிள்ளைகளின் கல்வியில் சற்று அக்கறை காட்ட வேண்டி இருக்கும் உடல்நலம் குறித்து கவனம் தேவை.குழந்தைகளுக்கு உடல் பிரச்சனைகள் வரலாம்

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | கார்த்திகை மாத ராசிபலன்: முருகரின் அருள் பெற்ற ராசிக்கு ஏற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News