உங்களை வார்த்தையால் அட்டாக் செய்பவரை சைலண்டா வாயை மூட வைக்கலாம்! 5 வழிகள்..
நமக்கு அனைவரையும் பிடிக்காததை போல, நம்மையும் அனைவருக்கும் பிடித்து விடாது. அப்படி, உங்களை பிடிக்காதவர்களை அமைதியாக்க சில வழிகள் உண்டு. அவை என்னென்ன தெரியுமா?
விமர்சனங்களை எதிர்கொள்வது என்பது அனைவருக்கும் கடினமான ஒன்று. ஆனால், ஒரு சிலர் நம்மை பற்றி கூறுவது விமர்சனமாக இருக்காது. நேரடி அட்டாக் போல இருக்கும். அப்படி கூறும் போது நமக்கு என்ன பேசுவது, என்ன கூறுவது என்பதே தெரியாது. அவர்கள் அப்படி உங்களை வார்த்தைகளால் சுட்டெரிக்க பல காரணங்கள் இருக்கலாம். அவர்களை சைலண்டாக சைலன்ஸ் செய்ய சில வழிகள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
உங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துங்கள்:
உங்களை பற்றி நீங்களே நன்றாக அறிந்து கொள்வது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்க வைக்கும். உங்களிடம் இருக்கும் பலம், தகுதிகள், நீங்கள் செய்த சாதனைகள் ஆகியவற்றை தினமும் நினைத்து பார்க்க வேண்டும். உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் மரியாதையை உயர்த்த தினமும் முயற்சி செய்ய வேண்டும். உங்களை நீங்களே நன்றாக பார்த்துக்கொண்டால், உங்களுக்கு நீங்கள் யார் என்று தெரிந்து விட்டால் வேறு யாருடைய விமர்சனமும் உங்களை பாதிக்காது.
மௌனத்தின் சக்தி:
ஒருவர் மௌனமாக இருந்தால், அவருக்கு அறிவு அதிகம் என பலர் சொல்வதை கேட்டிருப்போம். இது பெரும்பாலான சமயங்களில் உண்மையாகவும் இருக்கும். அதனால் முகத்திற்கு முன்பு யாரேனும் உங்களை திட்டினால் அல்லது மரியாதை குறைவாக பேசினால் அப்போது அமைதியாக அவர் கண்களையே பாருங்கள். ஒரு வீணான விவாதத்தில் உங்கள் எனர்ஜியை வீணாக்குவதற்கு பதிலாக மெளனமாக இருங்கள். நெகடிவிட்டியை உங்களை சுற்றி இருக்க விடாதீர்கள்.
நேர்மறையான நபர்களுடன் பழக்கம் வைத்துக்கொள்ளுங்கள்:
உங்களுடன் ஒத்த கருத்துடன் இருப்பவர்களுடன் பழக்கம் வைத்துக்கொள்ள வேண்டும். அது போன்ற நபர்களுடன் பழகும் போது உங்களுக்குள் நேர்மறையான சிந்தனைகள் அதிகரிக்கும். இது, உங்களை பாசிடிவான முறையில் யோசிக்க வைக்கும். இவர்கள், உங்களை பிறர் நேரடியாக அட்டாக் செய்தாலும் இவர்கள் உங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வர்.
மேலும் படிக்க | குழந்தைகளிடம் இந்த விசயங்களை பற்றி பெற்றோர்கள் ஒருபோதும் பேச கூடாது!
உங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்:
நீங்கள் நீங்களாக இருப்பது உங்களை பெரும்பாலான கெட்ட நபர்களிடம் இருந்து விலக்கி வைக்கிறது. இது, பிறர் உங்கள் மீது விமர்சனம் விதித்தாலும் அதிலிருந்து நீங்கள் தற்காத்துக்கொள்ள உதவும். உங்கள் மீது உங்களுக்கு இருக்கும் நம்பிக்கைத்தான் உங்களுக்கு கெட்டது நினைப்பவர்களை உங்கள் அருகில் நெருங்க விடாமல் தடுக்கும். இது, உங்கள் மனநிலையை பலமாக்கவும் உதவும்.
உங்கள் வளர்ச்சி பேசட்டும்:
நீங்கள் என்ன பேசினாலும், உங்கள் வளர்ச்சி மட்டுமே ஒருவருக்கு தக்க பதிலடியாக அமையும். நீங்கள் உங்களை வளர்த்துக்கொள்ள, தனிப்பட்ட ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் வளர்ச்சி பெற முயற்சி செய்ய வேண்டும். உங்கள் வெறுப்பாளர்கள் மீது கவனம் செலுத்தாமல் உங்கள் மீது அதிக கவனம் செலுத்துங்கள். இது, உங்களை ஒரு பெரிய மனிதராக மெருகேற்றும்.
மேலும் படிக்க | சரளமாக ஆங்கிலம் பேச வேண்டுமா? கிளாஸிற்கு செல்ல வேண்டாம்.. ‘இதை’ செய்யுங்கள்..