புதுடெல்லி: Bank Alert: எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி. பாரத ஸ்டேட் வங்கியின் இந்த முக்கிய சேவைகள் இன்று சனி மற்றும் நாளை வேலை செய்யாது. அதன்படி எஸ்பிஐ வங்கியின் ஆன்லைன் பரிவர்த்தனை தளங்கள் தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக நாளை 5 மணி நேரத்துக்கு இயங்காது என எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உண்மையில், இன்று மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால், வங்கி மூடப்பட்டுள்ளது மற்றும் ஞாயிற்றுக்கிழமை எஸ்பிஐ (SBI) வங்கி விடுமுறை ஆகும். இதற்கிடையில், டிசம்பர் 11, 2021 அன்று, 23:30 முதல் 4:30 மணி வரை (300 நிமிடங்கள்) தகவல் தொழில்நுட்ப சேவை (Technical Fault) நிறுத்தப்படும் என்று வங்கி தெரிவித்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், வங்கி தொடர்பான எந்த வேலையாக இருந்தாலும், அதை உடனடியாக ஆன்லைனில் செய்துக்கொள்ளுங்கள்.


ALSO READ: Home Loan Interest: குறைந்த வட்டி; வீட்டு கடனில் கலக்கும் பிரபல வங்கிகள் 


இந்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, தனது 44 கோடி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகள் டிசம்பர் 11, 2021 இரவு 11.30 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 4.30 மணி வரை நடைபெறும் என்றும், குறிப்பிட்ட இந்த 5 மணி நேரத்தில் வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங், UPI, Yono, Yono Lite, Yono Business ஆகிய சேவைகளை பயன்படுத்த முடியாது. இந்த நேரத்தில் மட்டும் வாடிக்கையாளர்கள் பொறுமை காக்க வேண்டுமென என தெரிவித்துள்ளது.


 



 


எஸ்பிஐ நான்கில் ஒரு பங்கு சந்தைப் பங்கைக் கொண்ட நாட்டின் மிகப்பெரிய வங்கியாகும். அதன் 11 துணை நிறுவனங்கள் மூலம் எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட், எஸ்பிஐ கார்டு போன்ற பல்வேறு வணிகங்களில் வெற்றிகரமாக பல்வகைப்படுத்தப்பட்டுள்ளது.


இது 32 நாடுகள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள 233 அலுவலகங்கள் மூலம் அனைத்து நேர மண்டலங்களிலும் உள்ளது. SBI நாடு முழுவதும் 22,000 க்கும் மேற்பட்ட கிளைகளையும் 57,889 க்கும் அதிகமான ATM நெட்வொர்க்குகளையும் கொண்டுள்ளது.


ALSO READ:SBI Alert: இனி பரிவர்த்தனைகளுக்கு அதிக தொகை செலுத்த வேண்டும் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR