நிலையான வைப்புகளான ஃபிக்ஸட் டெபாசிட்கள் முதலீட்டுக்கு பாதுகாப்பான விருப்பமாக கருதப்படுகின்றன. இவை சந்தை ஏற்ற இறக்கத்தால் பாதிக்கப்படுவதும் இல்லை. எஸ்பிஐ-யின் இந்த சிறப்புத் திட்டத்தைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் முதலீடு செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்டலாம். மேலும், எப்போது வேண்டுமானாலும் இந்தத் திட்டத்திலிருந்து பணத்தை எடுக்கலாம்.


எஸ்பிஐயின் மல்டி ஆப்ஷன் டெபாசிட் திட்டம்: விவரங்கள் இதோ 


ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) மல்டி ஆப்ஷன் டெபாசிட் (MOD) திட்டத்தின் பெயரில் எஃப்டி திட்டத்தை இயக்குகிறது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வது மிகவும் எளிதானது. இந்தத் திட்டத்தில், நீங்கள் ரூ. 1,000 இன் மடங்குகளில் பணத்தை டெபாசிட் செய்யலாம். மேலும் இந்தத் திட்டத்திலிருந்து ரூ. 1,000 மடங்குகளில் பணத்தை எடுக்கவும் செய்யலாம். 


எஸ்பிஐ-ன் மற்ற திட்டங்களில் கிடைக்கும் அதே வட்டி எஸ்பிஐ-இன் இந்த திட்டத்திலும் கிடைக்கும். மல்டி ஆப்ஷன் டெபாசிட் (எம்ஓடி) திட்டத்தில், குறைந்தபட்சம் ரூ. 10,000 முதலீட்டில் எஃப்டி கணக்கைத் திறக்கலாம். கணக்கைத் திறந்த பிறகு, இந்தத் திட்டத்தில் நீங்கள் ரூ. 1,000 மடங்குகளில் பணத்தை டெபாசிட் செய்யலாம். இந்தத் திட்டத்தில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு இல்லை.


மேலும் படிக்க | LIC IPO வெளியீட்டுக்கு முன் பெரிய அதிர்ச்சி: நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம் 


ஏடிஎம்மிலும் பணம் எடுக்கலாம்


மல்டி ஆப்ஷன் டெபாசிட் (எம்ஓடி) திட்டத்தில், ஏடிஎம்-களில் இருந்தும் பணத்தை எடுக்கலாம். ஏனெனில் இந்தத் திட்டம் உங்கள் நடப்பு அல்லது சேமிப்புக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் இருந்து நீங்கள் சிறிய தொகையை எடுத்தால், அதன் பிறகு உங்கள் ​​கணக்கில் எஞ்சியிருக்கும் தொகைக்கான வட்டியின் பலன் உங்களுக்கு வழங்கப்படும். 


இந்தத் திட்டத்தில் உங்களுக்கு சிறிய தொகை தேவைப்பட்டால், நீங்கள் உங்கள் எஃப்-டி-ஐ முடிக்க வேண்டிய அவசியமில்லை. தேவைப்பட்டால் இந்தத் திட்டத்தில் இருந்து சிறிய தொகையையும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். இந்த எஃப்டி-யை முடித்துக்கொள்ள விரும்பினால், இதற்காக நீங்கள் வங்கிக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. வீட்டில் அமர்ந்தபடியே இந்த எஃப்டி முடித்து ஏடிஎம் மூலம் பணம் எடுக்கலாம்.


மேலும் படிக்க | டோர் டெலிவரி சேவையை தொடங்கும் ரயில்வே! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR