SBI எச்சரிக்கை: இதை மட்டும் செய்யாதீர், செய்தால் காலி ஆகும் கணக்கில் உள்ள பணம்
நூதன மோசடிகளில் பலர் சிக்கித் தவிப்பதாக தினமும் செய்திகள் வருகின்றன. பயனர்கள் கண்டிப்பாக தங்கள் தனிப்பட்ட தகவல்களை யாருடனும் பகிர்ந்துகொள்ள வெண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது.
SBI Alert: வாடிக்கையாளர்களின் வசதிக்காக, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அவ்வப்போது பல வசதிகளை வழங்குகின்றது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் போக்கு சில காலமாக அதிகரித்துள்ளது. ஆனால் இதன் மூலம் சைபர் குற்றவாளிகளின் நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளன.
இப்படிப்பட்ட நூதன மோசடிகளில் (Online Fraud) பலர் சிக்கித் தவிப்பதாக தினமும் செய்திகள் வருகின்றன. பயனர்கள் கண்டிப்பாக தங்கள் தனிப்பட்ட தகவல்களை யாருடனும் பகிர்ந்துகொள்ள வெண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது. வங்கி அவ்வப்போது அளிக்கும் அறிவுறுத்தல்களை வாடிக்கையாளர்கள் பின்பற்றுவது மிக அவசியம்.
வங்கி மோசடிகள் ஏன் நிகழ்கின்றன?
பெரும்பாலான பண்டிகைக் காலங்களில், இலவச பரிசுகள் அல்லது வவுச்சர்கள் அதிகமாகக் கிடைப்பதால் மக்கள் அவற்றில் ஆர்வம் காட்டுகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இலவசப் பரிசு என்று செய்தி வரும்போதெல்லாம் மக்கள் அதில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்குகிறார்கள். சிலர் இதை கண்மூடித்தனமாக நம்பவும் செய்கிறார்கள்.
ஆனால் இந்த நம்பிக்கை தீங்கு விளைவிக்கும் ஒரு விஷயமாகவும் மாற வாய்ப்பு உள்ளது. இப்படிப்பட்ட இலவச பரிசுகள் விவகாரத்தில், வாடிக்கையாளர்கள் இந்தப் போலி இணைப்பைக் கிளிக் செய்து, அவர்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை சில நிமிடங்களில் இழந்துவிடுகிறார்கள்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ (SBI) இணைய மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு வாடிக்கையாளர்களை அவ்வப்போது எச்சரித்து வருகிறது.
ட்வீட் மூலம் வங்கி எச்சரிக்கை!
பாரத ஸ்டேட் வங்கி (SBI) தனது ட்விட்டர் கணக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் (SBI Customers) வங்கி விவரங்கள், ஏடிஎம் மற்றும் யுபிஐ பின்னை பகிருமாறு எஸ்பிஐ ஒருபோதும் கேட்பதில்லை என்று இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.
ஆகையால், ஏடிஎம் அல்லது யுபிஐ பின்னைக் கேட்டு செய்திகள் வந்தாலோ, அல்லது ஏதாவது இணைப்பைக் கிளிக் செய்யச் சொன்னாலோ, அதைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் வங்கி எச்சரித்துள்ளது.
சில சைபர் குற்றவாளிகள், எஸ்பிஐ-யின் பெயரில் வாடிக்கையாளர்களுக்கு செய்திகளை அனுப்பி, அவர்களது தனிப்பட்ட விவரங்களைக் கேட்கிறார்கள் என்பதை வங்கி விவரித்து தெளிவுபடுத்தியுள்ளது.
ALSO READ: SBI Offer: வங்கியின் இந்த முக்கிய வசதியைப் பற்றி உங்களுக்கு தெரியுமா
வாடிக்கையாளர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
- எஸ்பிஐ தனது வாடிக்கையாளரிடம் கணக்கு எண், டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு விவரங்களைக் கேட்பதில்லை.
- உங்கள் இணைய வங்கி மற்றும் OTP எண்களை யாருடனும் பகிர வேண்டாம்.
- மொபைல் போன் அல்லது செய்தியில் உள்ள எந்த வகையான இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டாம்.
சரியான செய்தியை அடையாளம் காணவும்
சைபர் குற்றவாளிகளால் அனுப்பப்படும் இந்த போலி செய்திகளை அடையாளம் காண்பது மிக எளிது. ஏனெனில் இந்த செய்திகளில் எழுத்துப்பிழை நிச்சயமாக இருக்கும்.
இதுபோன்ற செய்திகளை நீங்களும் பெற்றால், முதலில் இந்த செய்திகளை கவனமாக படிக்கவும். பின்னர் இது போலி செய்தி என உங்களுக்குத் தோன்றினால், வாடிக்கையாளர்கள் சைபர் கிரைம் இணையதளமான https://cybercrime.gov.in இல் புகார் செய்யலாம். அல்லது ஹெல்ப்லைன் எண்ணிலும் இது பற்றிய தகவலை தெரிவிக்கலாம்.
ALSO READ: SBI Alert: இனி பரிவர்த்தனைகளுக்கு அதிக தொகை செலுத்த வேண்டும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR