SBI Latest News: எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. வங்கி தனது 44 கோடி வாடிக்கையாளர்களுக்கு ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டு தொலைந்துவிட்டாலோ, எங்காவது விழுந்து விட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ, அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய தகவல்களை வங்கி அளித்துள்ளது. கார்ட் தொலைந்துவிட்டால் அதை எவ்வாறு தடுப்பது என்று எஸ்பிஐ தனது வீடியோவில் கூறியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எஸ்பிஐ வீடியோவை வெளியிட்டது


எஸ்பிஐ (SBI) வெளியிட்ட 1.25 நிமிட வீடியோவில், உங்கள் மொபைலில் இருந்தே, உங்கள் புதிய டெபிட் கார்டை எவ்வாறு பிளாக் செய்வது, கார்ட் மாற்றம் அல்லது புதிய கார்டை பெறுவது ஆகிய பணிகளை எவ்வாறு செய்யலாம் என எஸ்பிஐ  விளக்கியுள்ளது.


வாடிக்கையாளர் வங்கியின் கட்டணமில்லா எண் 1800 11 2211 அல்லது 1800 425 38000-ஐ அழைக்க வேண்டும் என்று வங்கி கூறியுள்ளது. இதன் பிறகு கார்டை பிளாக் செய்வதற்கான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.


எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள், தங்கள் மொபைல் எண் எஸ்பிஐ -யில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதனுடன், வாடிக்கையாளர் பிளாக் செய்ய விரும்பும் டெபிட் கார்டின் எண்ணையும் நினைவில் கொள்ள வேண்டும்.



கார்ட் பிளாக் செய்யப்பட்ட பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு எஸ்எம்எஸ் வரும். இதில் நீங்கள் கார்டை மாற்றுவதற்கான (ரீபிளேஸ் செய்வதற்கான) ஆர்டரையும் வைக்கலாம். ஆர்டர் கொடுத்த பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட முகவரியை அது அடைகிறது. இதற்காக வங்கி உங்களிடம் கட்டணத்தையும் வசூலிக்கிறது.


ALSO READ: SBI கல்விக்கடன்: இனி வெளிநாடு சென்று படிப்பது மிக சுலபம்!! 


2. நெட் பேங்கிங் மூலம் பிளாக் செய்யும் முறை


IVR மூலம் கார்டை நீங்கள் பிளாக் செய்ய விரும்பவில்லை என்றால், உங்களுக்கு வேறு ஆப்ஷன்களும் உள்ளன. எஸ்பிஐ வலைத்தளத்திற்கு சென்று இணைய வங்கி வசதி மூலம் உங்கள் எஸ்பிஐ கார்டை நீங்கள் பிளாக் செய்யலாம்.


1. முதலில் www.onlinesbi.com இல் லாக் இன் செய்யவும்.
2. 'இ-சேவைகள்'-ன் கீழ் 'ஏடிஎம் கார்டு சேவைகள்'-ன் கீழ் 'BLOCK ATM CARD' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
3. டெபிட் கார்டுடன் (Debit Card) இணைக்கப்பட்ட கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
4. செயலில் உள்ள மற்றும் பிளாக் செய்யப்பட்ட கார்டுகள் காட்டப்படும். அட்டையின் முதல் 4 மற்றும் கடைசி 4 இலக்கங்களைக் காண்பீர்கள்.
5. நீங்கள் பிளாக் செய்ய விரும்பும் கார்டுடன் அதை பிளாக் செய்வதற்கான காரணத்தையும் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ’சப்மிட்’ செய்யவும்.
6. விவரங்களைச் சரிபார்த்து உறுதிப்படுத்தவும். பின்னர் அதை அங்கீகார முறையாக (authentication) தேர்வு செய்யவும். OTP அல்லது கடவுச்சொல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று இருக்கும்.
7. கடவுச்சொல் அல்லது OTP ஐ உள்ளிட்டு ’கன்ஃபர்ம்’ பொத்தானைக் கிளிக் செய்யவும்.


3. எஸ்எம்எஸ் மூலம் இந்த வழியில் பிளாக் செய்யலாம்


உங்கள் டெபிட் கார்டை நீங்கள் இழந்துவிட்டால், எஸ்எம்எஸ் மூலமும் உங்கள் கார்டை பிளாக் செய்யலாம். இதை செய்ய வாடிக்கையாளர்களுக்கு பயனர்பெயர் (user name) மற்றும் கடவுச்சொல் (password) கூட தேவைப்படாது. கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து BLOCK என்று எழுதி, பின்னர், கார்டின் கடைசி 4 இலக்கங்களை எழுதி 567676 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். கார்ட் பிளாக்கை உறுதிபடுத்தும் செய்தி ஒன்றை வங்கி உங்களுக்கு அனுப்பும். இதில், டிக்கெட் எண், பிளாக் செய்யும் தேதி மற்றும் நேரம் ஆகியவை இருக்கும்.


4. SBI YONO செயலி மூலம் பிளாக் செய்வது எப்படி


வாடிக்கையாளர்கள் தங்கள் ஏடிஎம் / டெபிட் கார்டை எஸ்பிஐ யோனோ (SBI Yono ) செயலியின் உதவியுடனும் பிளாக் செய்யலாம். இதற்கு நீங்கள் முதலில் செயலிக்குள் செல்ல வேண்டும். இதற்குப் பிறகு Service Request விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து Block ATM/Debit Card-ஐ தேர்ந்தெடுக்கவும். உங்கள் இணைய வங்கி ப்ரொஃபைல் பாஸ்வர்டை உள்ளிடவும். இப்போது கார்ட் இணைக்கப்பட்டுள்ள கணக்கைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது அட்டை எண்ணைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பிறகு கார்ட் எண்ணை தெர்ந்தெடுக்கவும். கார்டை பிளாக் செய்வதற்கான காரணத்தை அதன் பிறகு தெரிவிக்க வேண்டும்.


ALSO READ: SBI வழங்கும் கொரோனா கடன்; குறைந்த வட்டியில் ₹5 லட்சம்; விண்ணபிப்பது எப்படி..!! 


ALSO READ: Gold from Water: அற்புதமான கண்டுபிடிப்பு! நீரிலிருந்து தங்கத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR