எஸ்பிஐ (ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா) மக்கள் வீட்டில் இருந்தபடியே ரூ. 60,000 வரை சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்குகிறது.  வங்கியில் இருந்து ஏடிஎம் உரிமையைப் பெறுவதன் மூலமும் இதைச் செய்யலாம். ஒருபோதும் வங்கிகள் ஏடிஎம்களை இன்ஸ்டால் செய்வதில்லை, அதனை செய்வதற்கென்றே பிரத்யேகமாக சில நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.  அதேசமயம் சில நிறுவனங்கள், ஏடிஎம்களை இன்ஸ்டால் செய்துகொள்ளும் கான்டராக்டை வங்கிகளுக்கு வழங்குகின்றன.  தற்போது இந்த ஏடிஎம் உரிமையை எடுப்பதன் மூலம் நாம் எவ்வாறு சம்பாதிக்கலாம் என்பதை பின்வருமாறு காண்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | Bitcoin Crash: படு வீழ்ச்சியில் கிரிப்டோகரன்சி, அச்சத்தில் முதலீட்டாளர்கள்


 


இதனை செய்ய சில நிபந்தனைகள் உள்ளது, அவை என்னவென்று காண்போம்.  முதலில் உங்களிடம் 50-80 சதுர அடி இடம் இருக்க வேண்டும், குறைந்தது 100 மீட்டர் இடைவெளியில் ஏடிஎம் அமைத்திருக்க வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுத்த இடம் தரை தளத்தில் இருக்க வேண்டும், அதோடு ஒதுக்குப்புறமான இடத்தில் இருக்கக்கூடாது.  அந்த பகுதியில் தங்கு தடையின்றி 24 மணி நேரமும் மின்சாரம் இருக்க வேண்டும்.  ஒரு நாளைக்கு ஒரு நாளைக்கு சுமார் 300 ட்ரான்ஸாக்ஷன் செய்யும் திறனை ஏடிஎம் பெற்றிருக்க வேண்டும், அந்த ஏடிஎம் பகுதியில் மேற்கூரை கான்கிரீட்டால் அமைக்க வேண்டும்.  V-SAT ஐ நிறுவுவதற்கு அதிகாரிகள் அல்லது சமூகத்திடம் இருந்து NOC பெற தேவையில்லை.


எஸ்பிஐ, ஏடிஎம் உரிமம் சில நிறுவனங்களால் வழங்கப்படுகிறது.  ஒருவர் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.  டாடா இண்டிகேஷ், முத்தூட் ஏடிஎம் மற்றும் இந்தியா ஒன் ஏடிஎம் ஆகியவை இந்தியாவில் முக்கியமாக ஏடிஎம்களை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தைக் கொண்டுள்ளன.  இதற்கு ஆர்வமுள்ளவர்கள் இந்த அனைத்து நிறுவனங்களின் இணையதளங்களிலும் ஆன்லைனில் லாக் இன் செய்து ஏடிஎம்-க்கு விண்ணப்பிக்கலாம்.  டாடா இண்டிகேஷ் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய நிறுவனமாகும்.  இது உரிமையாளர்களுக்கு, திரும்பப்பெறத்தக்க வகையில் ரூ.2 லட்சம் பாதுகாப்பு வைப்புத்தொகை அம்சத்தை வழங்குகிறது.  இது தவிர, ரூ.3 லட்சம் 'வொர்க்கிங் கேபிடலாக' டெபாசிட் செய்ய வேண்டும், ஆகவே இதன் மொத்த முதலீடு ரூ.5 லட்சம் ஆகும்.



ஒவ்வொரு பண பரிவர்த்தனைக்கும் நபருக்கு ரூ. 8, ஒவ்வொரு பணமில்லா பரிவர்த்தனைக்கும் ரூ. 2 கிடைக்கும்.  முதலீட்டின் மீதான வருமானம் ஆண்டு அடிப்படையில் 33-50% வரை இருக்கும், ஒரு மாத அடிப்படையில் வருமானம் கிட்டத்தட்ட ரூ. 45,000 முதல் ரூ. 90,000 வரை இருக்கும்.  டாடா இண்டிகேஷ் – www.indicash.co.in, முத்தூட் ஏடிஎம் - www.muthootatm.com/suggest-atm.html, இந்தியா ஒன் ஏடிஎம் - india1atm.in/rent-your-space இந்த தளங்களில் விண்ணப்பித்து கொள்ளலாம்.  மேலும் ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு, மின் கட்டணம், வங்கி கணக்கு மற்றும் பாஸ்புக், புகைப்படம், மின்னஞ்சல் ஐடி, தொலைபேசி எண், ஜிஎஸ்டி எண், நிதி ஆவணங்கள் போன்ற ஆவணங்களை சம்ரப்பிக்க வேண்டும்.


மேலும் படிக்க | Google Pay, PhonePe பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை! UPI-ல் நடக்கும் மோசடி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR