`அன்புள்ள திருடனுக்கு..` திருடனுக்கு கடிதம் எழுதிய பள்ளி ஆசிரியர்..!
கேரள மாநிலத்தில் திருடி செல்லப்பட்ட பென் டிரைவை (pen drive) கேட்டு, திருடனுக்கு பள்ளி ஆசிரியர்கள் கடிதம் எழுதியிருக்கும் சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது!!
கேரள மாநிலத்தில் திருடி செல்லப்பட்ட பென் டிரைவை (pen drive) கேட்டு, திருடனுக்கு பள்ளி ஆசிரியர்கள் கடிதம் எழுதியிருக்கும் சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது!!
கேரளா: தலச்சேரி தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 7 மாதங்களுக்கு முன்பு தலைமை ஆசிரியர் அறையிலிருந்த 40 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 30 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய கேமரா திருட்டு போனது. இதேபோல் அண்மையில் 3 மடிக்கணினிகள், ஒரு பென் டிரைவ், CCTV ஹார்டு டிஸ்க் ஆகியவை திருட்டு போனது. பென் டிரைவில்தான், வருகைப்பதிவேடு உள்ளதால் ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பள்ளி ஆசிரியர்கள் திருடனுக்கு கடிதம் ஒன்றை எழுதி சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். அதில், 'அன்புள்ள திருடனுக்கு... நீ யார் என்று எங்களுக்கு தெரியாது. ஆசிரியர்களின் 'டிஜிட்டல் கையெழுத்து' அடங்கிய பென் டிரைவை நீ எடுத்து போய்விட்டாய். அதில் உள்ள வருகைப் பதிவின் படிதான் எங்களுக்கு சம்பளம் கொடுப்பார்கள். அந்த கருவி இல்லாததால் எங்களுக்கு இந்த மாத சம்பளம் கிடைக்காது. வீட்டு செலவு, பெரியவர்களுக்கு மருத்துவ செலவு, கடனுக்கு வட்டி கட்டுதல் போன்றவைகள் உள்ளன. எனவே அந்த 'பென் டிரைவ்'வை மட்டும் திருப்பி கொடுத்து விடு, என கடிதத்தில் உருக்கமாக திருடனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்". இந்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.