ஐடிஆர் தாக்கல் செய்பவர்களுக்கு ஒரு பெரிய செய்தி, உடனே தெரிஞ்சிகோங்க
Pan-Aadhaar Link: பத்திரச் சந்தையில் பரிவர்த்தனை செய்வதற்கு, தற்போதுள்ள அனைத்து முதலீட்டாளர்களும் தங்கள் பான் எண்ணை மார்ச் 31, 2023க்கு முன் ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயமாகும். அவ்வாறு செய்யாதவர்களின் KYC முழுமையற்றதாகக் கருதப்படும்.
பங்குச் சந்தையில் சுமூகமான பரிவர்த்தனைகளுக்கு மார்ச் இறுதிக்குள் அனைத்து முதலீட்டாளர்களும் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்குமாறு (Pan Aadhaar Link) மூலதனச் சந்தைக் கட்டுப்பாட்டாளர் செபி புதன்கிழமை கேட்டுக் கொண்டுள்ளது. அவ்வாறு செய்யத் தவறினால் KYC முழுமையடையாததாகக் கருதப்படும் என்று SEBI ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஒரு அறிக்கையில், நிரந்தர கணக்கு எண் (PAN) மற்றும் ஆதார் (Aadhaar) இணைக்கப்படும் வரை, பங்கு மற்றும் பிற பரிவர்த்தனைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று செபி தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | PPF: பிபிஎஃப்பில் இருந்து சுலபமாக கடன் பெற டிப்ஸ்! வட்டியும் குறைவு
ஆதார் மற்றும் பான் இணைப்பு கட்டாயம்
மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) மார்ச் 2022 இல் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது, அதன்படி மார்ச் 31, 2023க்குள் ஆதாருடன் இணைக்கப்படாவிட்டால் தனிநபருக்கு ஒதுக்கப்பட்ட பான் செயலிழந்துவிடும். 1961 வரிச் சட்டத்தின் கீழ், ஆதாரை இணைக்காததால் பான் செல்லாது எனில், அனைத்து விளைவுகளுக்கும் முதலீட்டாளர் பொறுப்பாவார் என்று செபி கூறியது.
பான் இல்லாமல் எந்த வேலையும் நடக்காது
பான் என்பது முக்கிய அடையாள எண் மற்றும் பங்கு அல்லது பத்திர சந்தையில் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் கட்டாயமாகும். இது KYC தேவைகளின் ஒரு பகுதியாகும். சந்தையில் முதலீடு செய்யும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் செல்லுபடியாகும் KYC தரநிலைகளை பூர்த்தி செய்ய SEBI பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மற்றும் சந்தை உள்கட்டமைப்பு நிறுவனங்களால் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மார்ச் 31, 2023 கடைசி தேதி
வருமான வரிச் சட்டத்தின் விதிகளின்படி, ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர்த்து, பான் அட்டை வழங்கப்பட்ட ஒவ்வொரு நபரும் அதை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும். இதைச் செய்யாவிட்டால், பான் செயலிழந்துவிடும்.
இதனிடையே பான் கார்டு செயலிழந்த பிறகு, அதை ஆவணமாகப் பயன்படுத்தினால், 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். வருமான வரி 272பி பிரிவின் கீழ் இந்த அபராதத்தை நீங்கள் செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க | வீட்டில் இருந்த படியே நிமிடங்களில் பாஸ்போர்ட் பெற விண்ணபிப்பது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ