திருப்பதி: ஆதார் இருந்தால் மட்டுமே ஏழுமலையானை தரிசிக்க முடியும்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் பெற இனி ஆதார் கட்டாயம் என நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி அறிவித்துள்ளார். வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை பயன்படுத்தி தரிசன டிக்கெட் இனிமேல் பெற இயலாது என்றும் தெரிவித்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 5, 2023, 02:38 PM IST
திருப்பதி: ஆதார் இருந்தால் மட்டுமே ஏழுமலையானை தரிசிக்க முடியும் title=

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் லட்சகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். திருமலைக்கு வரும் பக்தர்கள் முன்கூட்டியே ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. முன்பதிவு செய்யாத பக்தர்கள் நேரடியாக வந்து கட்டணமில்லா தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்கலாம். ஆனால் இதில் கொஞ்சம் கூடுதல் நேரம் ஆகும். ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வது என்றால், திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு சென்று ஏதாவதொரு அடையாள அட்டையை சமர்பித்து, இதுவரை டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என்ற நடைமுறை இருந்தது.

மேலும் படிக்க | திருப்பதி: திவ்ய தரிசன டிக்கெட் இவர்களுக்கு கிடைக்காது - தேவஸ்தானம் அறிவிப்பு

ஆனால் இந்த நடைமுறை இப்போது நீக்கப்பட்டுள்ளது. ஆதார் இருந்தால் மட்டுமே திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் தரிசிக்க முடியும். இதுவரை ஆதார் இல்லாத பக்தர்கள் வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை பயன்படுத்தி தரிசன டிக்கெட் பெற்று வந்தனர். அது இப்போது நீக்கப்பட்டு, ஆதார் எண் மட்டுமே அடையாள ஆணவம் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து, திருமலையில் செய்தியாளர்களை சந்தித்த தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, “300 ரூபாய் தரிசன டிக்கெட், கட்டண சேவை டிக்கெட், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வழங்கப்படும் முன்னுரிமை அடிப்படையிலான தரிசன டிக்கெட் உட்பட ஏழுமலையானை தரிசிப்பதற்கு உரிய அனைத்து டிக்கெட்டுகளையும் இனிமேல் ஆதார் எண் அடிப்படையில் மட்டுமே பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும்.

ஏழுமலையான் கோயில் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய பக்தர்கள் இனிமேல் வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை பயன்படுத்த இயலாது. திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த திவ்ய தரிசன டோக்கன் நிறுத்தப்பட்டுள்ளது. அதனை மீண்டும் விரைவில் துவங்க தேவையான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

300 ரூபாய் தரிசன டிக்கெட், இலவச தரிசன டோக்கன் ஆகியவை உள்ளிட்ட ஏதாவது ஒரு தரிசன டிக்கெட்டை வாங்கி இருக்கும் பக்தர்களும் நடந்து மலையேறும் போது அங்கு வழங்கப்படும் தரிசன டோக்கனையும் வாங்கி வருகின்றனர். இதனால் ஒரே பக்தர் ஒரே நாளில் இரண்டு வகையான தரிசன வாய்ப்புகளை பெறுகிறார். நிர்வாக அளவில் இதனால் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகின்றன. இதனை தடுத்து நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின் திவ்ய தரிசன டோக்கன்கள் பக்தர்களுக்கு மீண்டும் வழங்கப்படும்" என்றார்.

மேலும் படிக்க | திருப்பதி: திவ்ய தரிசன டிக்கெட் மீண்டும் எப்போது வழங்கப்படும்? தேவஸ்தானம் தகவல்

மேலும் படிக்க | திருப்பதி: பக்தர்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டது ஏன்?

மேலும் படிக்க | குரு பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி யோகம்: 3 ராசிகளுக்கு உச்சக்கட்ட லாபம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News