கோடக் மஹிந்திரா வங்கி புதிய FD வட்டி விகிதம்: நாட்டின் மூன்றாவது பெரிய தனியார் துறை வங்கி FD மீதான வட்டி (Fixed Deposit Interest Rate) விகிதத்தை தற்போது அதிகரித்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு முன்பை விட அதிக வருமானம் கிடைக்கும். அதன்படி தற்போது புதிய கட்டணங்கள் அமலுக்கு வந்துள்ளன. இங்கே நாம் கோடக் மஹிந்திரா வங்கியைப் (Kotak Mahindra Bank) பற்றி தான் பேசுகிறோம். 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான எஃப்.டி (Fixed Deposits) மீது வாடிக்கையாளர்களுக்கு 2.75% முதல் 7.25% வரையிலான வட்டியை வங்கி வழங்குகிறது. இது சாதாரண குடிமக்களுடன் ஒப்பிடும்போது மூத்த குடிமக்களுக்கு 0.5% வட்டி விகிதத்தை வழங்குகிறது. விகிதங்கள் 3.25% முதல் 7.75% வரை இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இத்தனை நாட்கள் கொண்ட FDக்கு அதிக வட்டி தரப்படுகிறது:
23 மாதங்கள், 1 நாள்-2 ஆண்டுகளுக்கு குறைவான FDக்கு வங்கி அதிக வட்டி அளிக்கிறது. இதற்கான விகிதங்கள் 7.25 சதவீதம் ஆகும். 391 நாட்கள்-23 மாதங்களுக்கும் குறைவான FDக்கு 7.20 சதவீதம் வட்டி கிடைக்கும். 2 ஆண்டுகள் மற்றும் 3 ஆண்டுகளுக்கு குறைவான டெபாசிட்டுகளுக்கு 7.10 சதவீதம் வட்டி, 3 ஆண்டுகள் மற்றும் 4க்கு குறைவான காலவரையறைக்கு 6.50%, 4 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகளுக்கு குறைவான FDகளுக்கு 6.25 சதவீதம் வட்டியும், 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FDகளுக்கு 6.20 சதவீதம் வட்டியும் கிடைக்கும். அதே சமயம், 390 நாட்களுக்கான FDக்கு 7.10 சதவீதம், 365 நாட்களில் இருந்து 389 நாட்கள் வரை FDயில் 7.10 சதவீதம், 390 நாள் வைப்புகளில் 7.15% மற்றும் 391 நாட்களுக்கான FDக்கு 7.20 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.


மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கான தீபாவளிக்கு முன் டபுள் ஜாக்பாட், 4% டிஏ ஹைக்குடன் இதுவும்..


ஒரு வருடத்திற்கும் குறைவான FDக்கான வட்டி விகிதம்
கோடக் மஹிந்திரா வங்கி 364 நாட்களுக்கு 6.50 சதவீதம் FD, 271 நாட்கள் முதல் 363 நாட்களுக்கு 6  சதவீதம் மற்றும் 270 நாட்களுக்கு 6 சதவீதம் வட்டி வழங்குகிறது. 181-269 நாட்களின் FDயில் 6 சதவீதம், 180 நாட்களின் காலப்பகுதியில் 7 சதவீதம், 121-179 நாட்கள் காலப்பகுதியில் 4.25 சதவீதம், 91-120 நாட்களின் காலப்பகுதியில் 4 சதவீதம், 46-90 நாட்கள் FD இல் 3.50 சதவீதம், 31- 45 நாள் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 3.25 சதவீதம் வட்டியும், 15-30 நாள் FDக்கு 3 சதவீதம் வட்டியும், 7-14 நாள் டெபாசிட்டுக்கு 2.75% வட்டியும் கிடைக்கும்.


சமீபத்தில் ஐசிஐசிஐ வங்கி, பாங்க் ஆப் பரோடா மற்றும் எச்டிஎஃப்சி ஆகியவையும் வட்டி விகிதங்களை மாற்றின:
இதனிடையே சமீபத்திய மாற்றங்களுக்குப் பிறகு, இப்போது சாதாரண குடிமக்கள் HDFC வங்கியில் FD செய்ய 3% முதல் 7.20% வரை வட்டி பெறுகிறார்கள். மூத்த குடிமக்களுக்கு 3.50% முதல் 7.75% வரை வட்டி கிடைக்கும்.


பாங்க் ஆஃப் பரோடா இப்போது சாதாரண குடிமக்களுக்கு FDக்கு 3.00 முதல் 7.25% வட்டி அளிக்கிறது. அதே நேரத்தில், மூத்த குடிமக்களுக்கு FD மீது 3.50 முதல் 7.75% வரை வட்டி வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | பென்ஷன் பற்றி இனி நோ டென்ஷன்: மாதா மாதம் 1 லட்சம் ஓய்வூதியம்.. அசத்தும் NPS


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ