இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30 சனிக்கிழமையன்று நிகழவுள்ளது. இந்த நாளில் சனி அமாவாசை யோகமும் உருவாகிறது. சனிக்கிழமையில் வரும் அமாவாசை சனி அமாவாசை  என்று அழைக்கப்படுகிறது. மறுபுறம் வரும் ஏப்ரல் 29-ம் தேதி சனிபகவான் தனது ராசியை மாற்றப் போகிறார். அதன்படி தற்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு, சனி பகவான் அதன் அசல் முக்கோண ராசியான கும்பத்தில் நுழைகிறார். கிரக இயக்கத்தின் பார்வையில் இது ஒரு முக்கியமான நிகழ்வாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் ஜோதிடத்தின் பார்வையில், சூரிய கிரகணம் மற்றும் சனி அமாவாசை ஒரே நாளில் விழுவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. பல வருடங்களுக்குப் பிறகு இந்த தற்செயல் நிகழ்வு அரங்கேறியுள்ளது. இந்த சனி பெயர்ச்சி மற்றும் சூரிய கிரகணம் அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கும். இந்த சேர்க்கையால் எந்த ராசிக்கு பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்-


மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த கிரகணம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். இந்த நேரத்தில், ஒரு புதிய வேலையைத் தொடங்கும் எண்ணம் உங்கள் மனதில் தோன்றலாம், இது எதிர்காலத்தில் உங்களுக்கு நன்மை பயக்கும். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். பணியிடத்தில் இடம் மாறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். இந்த காலகட்டத்தில் நிதி ஆதாயங்கள் இருக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வருமானம் மற்றும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டாகும். மிதுன ராசியின் அதிபதி புதன் கிரகம். சூரியனுக்கும் புதனுக்கும் நட்பு இருந்தால் சுப பலன்கள் கிடைக்கும்.


மேலும் படிக்க | இந்த ராசிக்கார பெண்கள் அதிர்ஷ்டத்தின் மறு அவதாரமாய் இருப்பார்கள்: உங்க மகளுக்கு இந்த ராசியா? 


கடகம்- சூரிய கிரகணத்தின் நேர்மறையான விளைவை கடக மக்கள் மீது காணலாம். இந்த கிரகணத்தால் உங்களுக்கு பொருளாதார பலன்கள் கிடைக்கும். வியாபாரிகள் அதிக லாபம் ஈட்டலாம். தாயாரின் ஆதரவு இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். முதலீடு செய்வதற்கு சாதகமான காலம். பிள்ளைகள் தரப்பிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும்.


தனுசு ராசி - தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய கிரகணம் சாதகமாக அமையும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் ஒரு பெரிய ஒப்பந்தம் நடக்க முடியும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் வரலாம். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். தனுசு ராசியை ஆளும் கிரகம் வியாழன். ஜோதிடத்தின் படி, வியாழன் மற்றும் சூரியன் இடையே நட்பு உணர்வு உள்ளது, எனவே இந்த கிரகணம் உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.


சனி பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்


மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு நாளை முதல் நல்ல நாட்கள் தொடங்கும். வியாபாரத்தில் லாபம் பெறலாம். ஒரு பெரிய ஒப்பந்தத்தை கையெழுத்திடலாம். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. புதிய வேலை வாய்ப்பு வரலாம். மேலும், சுப பயணம் மேற்கொள்ளலாம். பழைய நோய்களில் இருந்து விடுபடலாம். 


ரிஷபம் - ஜோதிடத்தின் படி சனி கிரகம் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பத்தாம் இடத்தில் பெயர்ச்சி ஆகும். வியாபாரத்தில் லாபம் கூடும். தொழிலில் நல்ல வளர்ச்சியைப் பெறலாம். நீங்கள் புதிய தொழில் தொடங்க நினைத்தால், இந்த நேரம் சாதகமாக இருக்கும். வேலை மாற விரும்புபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். வருமானத்தில் பெரிய அதிகரிப்பு ஏற்படும். 


தனுசு: சனிபகவானின் ராசி மாற்றம் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் மரியாதை பெறுவீர்கள். சனிப்பெயர்ச்சியின் போது பழைய நோய்களில் இருந்து விடுபடலாம். தடைபட்ட வேலைகள் நிறைவேறும். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரர்கள் தலைவிதி மாறும், பண மழை பொழியும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR