30 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த வீட்டுக்கு செல்லும் சனி: சனீஸ்வரரின் பிறந்த வீடு எது
சனீஸ்வரர் இன்று 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்பத்தில் நுழைகிறார். இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, தனது ராசியை மட்டுமல்ல, சனி தனது சொந்த ராசிக்கு செல்வது சிறப்பானதாக கருதப்படுகிறது.
சனீஸ்வரர் இன்று 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்பத்தில் நுழைகிறார். இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, தனது ராசியை மட்டுமல்ல, சனி தனது சொந்த ராசிக்கு செல்வது சிறப்பானதாக கருதப்படுகிறது.
சனியின் பெயர்ச்சி யாருக்கு நல்லது யாருக்கு கெட்டது என்ற அனுமானங்களும் ஊகங்களும் தொடர்ந்துக் கொண்டே இருக்கின்றன.
இன்று தனது சொந்த வீட்டிற்கு சென்றிருக்கிறார் சனி என்று சொல்கிறோம். சனீஸ்வரர், தனது கடமைகளை செய்ய தனக்கு என்று ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டார்.
ஆனால் உண்மையில் சனீஸ்வரரின் பிறந்த வீடு எது? அவரது பெற்றோர் யார் என்பது ஆச்சரியமானத் தகவல்.
மேலும் படிக்க | சனி பெயர்ச்சி 2022: இது உங்களுக்கு ஏழரையா இல்லை மங்கு சனியா
சூரியதேவரின் மனைவி சந்தியாதேவிக்கு கணவர் மீது பாசமும் பக்தியும் இருந்தாலும் பல காலமாக சூரியனுடனே இருந்ததால் அவரது வெப்பத்தை தாங்காமல் சக்தியிழந்து சோர்ந்து போய்விட்டார்.எனவே, கணவரிடம் இருந்து விலகி தவம் செய்து, இழந்த சக்தியை மீண்டும் பெற எண்ணினார்.
ஆனால் தகிக்கும் சூரியனிடம் தனது எண்ணத்தைச் சொல்ல பயந்த சந்தியா, தன்னுடைய நிழலில் இருந்து தன்னைப் போன்ற உருவம் கொண்ட பெண்ணைத் தோற்றுவித்தார். நிழலில் இருந்து உருவானதால் அந்தப் பெண்ணுக்கு சாயாதேவி என்று பெயரிட்டார்.
சந்தியா தவம் செய்வதற்காக பிரிந்து சென்றதை அறியாமலேயே சூரியன், சாயாதேவியுடன் வாழ்ந்து வந்தார். சாயாதேவிக்கும் சூரியனுக்கும் பிறந்தவர் சனி.
மேலும் படிக்க | சனி பெயர்ச்சி; மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்
வெப்பத்தைக் கக்கும் சூரியனுக்கு அருகே இருந்து, அவருக்கு பணிவிடை செய்து வந்ததால் அந்த தகிப்பின் எதிரொலியாயும், நிழலான சாயாதேவியின் மகன் என்பதாலும் சனீஸ்வரர் கருப்பாக பிறந்தார்.
கருமை நிற தோற்றத்துடன் இருந்த மகனை, தன்னுடைய மகனாக சூரியன் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். அன்னையின் பரிதவிப்பைக் கண்ட சனீஸ்வரர் சூரியனை கோபத்துடன் பார்த்தார். அப்போது, சூரியன் மீது கிரகணம் ஏற்பட்டது. அப்போதுதான் சனியின் சக்தி அப்பா சூரியனுக்குத் தெரிந்தது.
தேவர்கள், கடவுளர்கள், மக்கள் என்ற பாரபட்சமின்றி அனைவருக்கும் அவரவர் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பலன்களை வழங்கவே சனி பிறந்துள்ளார் என்பதை சிவபெருமானிடம் இருந்து சூரியன் கேட்டுத் தெரிந்துக் கொண்டார்.
மேலும் படிக்க | இந்த பரிகாரம் செய்தால் சனீஸ்வரரின் தோஷம் நிவர்த்தியாகும்
இதனால் மகிழ்ந்த சூரியன், சனியைத் தன் புதல்வனாக ஏற்றுக் கொண்டார். சனி வளர்ந்த பிறகு தன் பொறுப்பை உணர்ந்து கொண்டார்.
பாரபட்சமின்றி நீதி வழங்க பந்த பாசங்களைத் துறக்க வேண்டும் என்பதால் சனி தன் பெற்றோரைப் பிரிந்து சென்று சனிலோகத்தில் வாழத் தொடங்கினார். சனியின் பிடியில் இருந்து சிவபெருமான் உட்பட யாருமே தப்பியதில்லை. விநாயகர், அனுமான் என யாருமே சனியின் பார்வைக்கு தப்ப முடியாது.
நல்லது செய்தால் அவர்களுக்கு நற்பலன்களையும், அல்லது செய்தால் அவர்களுக்கு அடாவடியாய் பலன்களையும் தருவார் சனி பகவான்.
எனவே, சனியின் நல்லருளைப் பெற வேண்டும் என்றால் நன்மைகளையே செய்யுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரர்கள் தலைவிதி மாறும், பண மழை பொழியும்
மேலும் படிக்க | இந்த ராசிக்கார பெண்கள் அதிர்ஷ்டத்தின் மறு அவதாரமாய் இருப்பார்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR