சனி பெயர்ச்சி 2022: இது உங்களுக்கு ஏழரையா இல்லை மங்கு சனியா

நீதி தேவன் என்று அழைக்கப்படுபவர் சனீஸ்வரர். அதேபோல, ஈஸ்வர பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனி மட்டுமே.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 29, 2022, 01:07 AM IST
  • ஈஸ்வர பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனி
  • ஜாதகத்தில் சுபராக இருந்தால் சுப பலன்களை வாரி வழங்கும் வள்ளலாக இருப்பார் சனி
  • மங்கு சனியாகவும் மரணச் சனியாகவும் வாட்டி வதைப்பார் சனீஸ்வரர்
சனி பெயர்ச்சி 2022: இது உங்களுக்கு ஏழரையா இல்லை மங்கு சனியா title=

சனி பெயர்ச்சி என்றாலே அனைவரும் மிகவும் கவனமாக பார்ப்பார்கள் படிப்பார்கள். சனி பெயர்ச்சியாகும் போது, சிலருக்கு ஏழரைச் சனியாகவும், சிலருக்கு மங்கு சனியாகவும், சிலருக்கு பொங்கு சனியாகவும் இருந்தால், சிலருக்கு மட்டும் தங்கு சனியாக இருப்பார். மற்றும் சிலருக்கு மரணச் சனியாக இருப்பார்.

யாருக்கு எந்த சனியாக இருந்தாலும், நீதி தேவன் என்று அழைக்கப்படுபவர் சனீஸ்வரர். அதேபோல, ஈஸ்வர பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனி மட்டுமே.

இப்படி பல சிறப்புகளைப் பெற்றாலும் சனீஸ்வரரைப் பார்த்து மற்ற கிரகங்களைவிட மக்கள் அதிகம் பயப்படுவது ஏன்? 

ஏனென்றால் தவறுக்கு நீதிபதியாய் நின்று தண்டிப்பவரும், கண்டிப்பவரும் சனீஸ்வரரே என்பதால் தான் அனைவருக்கும் பயம் ஏற்படுகிறது.

மேலும் படிக்க | சனி பெயர்ச்சி; மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்

அதேபோல், சனீஸ்வரர், நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொல்லும் நக்கீரரைப் போல, பாரபட்சம் இல்லாமல் அனைவருக்கும் அவரவர் பாவ புண்ணியத்துக்கு ஏற்ப பலன்களை கொடுப்பவர்.

பாப கிரக வரிசையில் முதலிடம் வகிக்கும் சனீஸ்வரரின் நட்சத்திரங்கள்- பூசம், அனுஷம், உத்திரட்டாதி. ஒரு ஜாதகரின் லக்னத்தில் சனி நின்றால் அவருக்கு ஆயுள் கெட்டியாக இருக்கும். 

அதேபோல், லக்னத்தின் மூன்றாம் இடத்தில் சனீஸ்வரர் இருந்தால், பணவருவாய், பிரபலம், செல்வாக்கு என மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.

மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரர்கள் தலைவிதி மாறும்

லக்னத்தில் இருந்து ஆறாம் வீட்டில் சனீஸ்வரர் அமர்ந்திருந்தால் தன யோகம் கிடைக்கும். அதேபோல,  சத்ரு ஜெயம்,  தைரியம் மற்றும் அஷ்ட லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

அதேபோல பலருக்கு தீமையான பலன்களையும் கொடுப்பார் சனி தேவர்.

ஒருவரின் பிறந்த ஜாதகத்தின் அடிப்படையில் சனி பகவான் சுபராக அமைந்துவிட்டால் நற்பலன்களைக் கொடுப்பார். ஆனால், ஜாதகத்தில் சனி அசுபராம இருந்துவிட்டால் பல கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும்.

மேஷம், கடகம், விருச்சிகம், தனுசு, சிம்மம், மீனம் ஆகிய லக்னங்களில் பிறந்தவர்களுக்கு சனி அசுபர் எனவே இவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பொதுவாக சனீஸ்வரர், 12 ராசிகளில் 1, 2, 4, 5, 7, 8, 9, 10 வீடுகளில் சஞ்சரிக்கும்போது, கோச்சாரத்தில் கெடுபலனைத் தருவார். 

ஆனால் ஆறுதலான விஷயம் என்னவென்றால், சனி  தீமை செய்யும் இடத்தில் இருந்தாலும், பிற நல்ல கிரகங்களின் பார்வையும் சேர்க்கையும் இருந்தால், சனியின் கெடு பலன்களில் இருந்து தப்பிக்கலாம்.

மேலும் படிக்க | Akshaya Tritiya 2022: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News