சனி பஞ்ச மகாபுருஷ யோகம்: கடந்த மாதம், ஏப்ரல் 29-ம் தேதி, சனி கிரகத்தின் பெயர்ச்சி நடந்தது. 30 ஆண்டுகளுக்கு பிறகு கும்ப ராசிக்கு சனி பகவான் பிரவேசித்துள்ளார். கும்பம் சனியின் ராசியாகும். கும்ப ராசியில் சனி மாறுவதால் சில ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியில் இருந்து நிவாரணம் கிடைத்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதே சமயம் சிலருக்கு ஏழரை நாட்டு சனி ஆரம்பித்து விட்டது. சனி தேவன், கர்மாவுக்கு ஏற்ற பலனைக் கொடுப்பவர். ஒரு நபரின் செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தருகிறார். பஞ்ச மகாபுருஷ யோகம் சனியின் இந்த பெயர்ச்சியினால் உருவான நிலையில், இது அனைத்து ராசிகளையும் பாதிக்கும்


ஒருவரது வாழ்க்கையில் நல்ல செயல்களைச் செய்வதன் மூலம், சுப பலன்கள் கிடைக்கும். அதே சமயம், தவறான செயல்களைச் செய்தால், அந்த நபர் ஏழரை நாட்டு சனி, சனி தோஷம் போன்ற காலங்களில் செய்த செயல்களுக்கு ஏற்ப பலன்களைப் பெறுகிறார். சனியின் பஞ்ச மகாபுருஷ யோகத்தின் பலன் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.


மேலும் படிக்க | Solar Eclipse: கிரகணத்தின் போது சூரியனின் அருளைப் பெற செய்ய வேண்டியவை


கும்ப ராசியில் சனி நுழைவதால் ஏற்படும் பலன்


கும்பம்: கும்பம் லக்னம் மற்றும் ராசிக்காரர்களுக்கு, சனிபகவான், லக்னம் மற்றும் ராசிக்கு அதிபதியாக இருப்பதால், அசுப பலன்களைக் கொடுப்பார். சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் சஞ்சரிப்பதால்  பஞ்ச மகாபுருஷ் யோகம் உருவாகிறது. குறிப்பாக கும்ப ராசிக்காரர்களுக்கு இது பலன் தரும். பணியிடத்தில் மாற்றங்கள் ஏற்படலாம். அதே நேரத்தில், உங்கள் வேலை திறன் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. புதிய தொழில், வியாபார வாய்ப்புகள் உருவாகும். அதே நேரத்தில், சனியின் பரிகாரங்கள் இந்த காலகட்டத்தில் நல்ல பலனைத் தரும். அனுமனை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.


மீனம்: ஜோதிட சாஸ்திரப்படி மீன ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி காலம் பண விரயம் அதிகம் உள்ள காலமாக இருக்கும். மீனம் லக்னம் மற்றும் மீனம் ராசிக்கு சனி அசுப பலன்களை கொடுக்கிறது. வணிக நடவடிக்கைகளிலும் நீங்கள் அதிக அளவில் செலவுகளைச் செய்ய நேரிடலாம்.


பஞ்ச மகாபுருஷ் யோகம் என்றால் என்ன 


பஞ்ச மகாபுருஷ் யோகம்: இந்த யோகம் வியாழன், செவ்வாய், சுக்கிரன், சனி மற்றும் புதன் ஆகிய ஐந்து கிரகங்களால் உருவாகிறது. ஒருவரின் ஜாதகத்தில் இந்த யோகம் உருவாகும் போது, ​​அந்த நபர் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார். ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒருவரின் ஜாதகத்தில் பஞ்ச மகாபுருஷ யோகம் உருவாகி இருந்தால், அதே கிரகங்கள் ஜாதகத்தில் உச்சமாக இருந்தால், இந்த யோகம் அதிகம் பாதிக்கிறது.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | சனி அமாவாசையில் சூரிய கிரகணம்; மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR