சனி ஒரு நீதியை விரும்பும் கிரகமாக கருதப்படுகிறது. சனி இந்த பிறவியில் உங்கள் செயல்களுக்கு பலனைத் தருகிறார் என்பது ஐதீகம்.  சனி  பகவான் நீங்கள் செய்த காரியத்தின் பலனைத் தருகிறார், அது கெட்டதோ அல்லது நல்லதோ அதற்கான பலனை அவர் கொடுப்பதால் தான் நீதிக் கடவுள் என அழைக்கப்படுகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனியை சந்தோஷப்படுத்தும் பல விஷயங்கள் உள்ளன. எனவே,  சனியைப் பிரியப்படுத்த ஏழைகளுக்கு உதவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம்  ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தோஷத்தின் தாக்கம் குறைகிறது. சனியின் ராசி மாற்றங்கள் இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும். அதாவது ஒவ்வொரு இரண்டரை வருடங்களுக்கும் சனி ஒரே ராசியில் இருப்பார்.  


இம்மாத இறுதியில் மகர ராசியை விட்டு சனி பகவான் கும்ப ராசியில் பிரவேசிக்க உள்ளார். சனியின் இந்த ராசி மாற்றம் 30 வருடங்களாக இந்த ராசியில் நடந்து வருவதால் பல வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு இந்த சனி மாற்றம் சிறப்பாக அமையப் போகிறது.


மேலும் படிக்க | இந்த 4 ராசிக்காரர்களுக்கு காத்திருக்கும் பம்பர் பரிசு


30 மாதங்களுக்குப் பிறகு கும்ப ராசியில் சனிப்பெயர்ச்சி நடைபெறும் நிலையில்,  இரு ராசிகளுக்கு சனி திசை தொடங்கும். இரண்டரை வருடங்களாக பிரச்னைகளை சந்தித்து வந்த மிதுனம், துலாம் ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சியால் நிம்மதி கிடைக்கும்.


ஆனால் இது குறுகிய காலத்திற்கு இருக்கும். ஜூலை 12-ம் தேதி சனி மீண்டும் மகர ராசியில் பிரவேசித்து இரண்டு வருடங்கள் அங்கே இருப்பார். எனவே, மிதுனம் மற்றும் துலாம் மீண்டும் பாதிப்பு இருக்கும். இதன் பிறகு ஜனவரி 17, 2023 அன்று மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கு நிம்மதி கிடைக்கும்.


சனியின் ராசி மாற்றத்தால் மீனத்தில் ஏழரை நாட்டு சனி தொடங்கும். சனியின் இந்த சஞ்சாரம் சவால்கள் நிறைந்ததாக இருக்கும். கடனால் சிரமப்படுவீர்கள். எந்தவொரு துறையிலும் வெற்றி பெற, நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். மன உளைச்சல் இருக்கலாம். மேலும், குழந்தையைப் பற்றிய கவலையும் இருக்கும். ஆரோக்கியத்திலும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக பணம் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.


மேலும் படிக்க | பண விஷயத்தில் அதிர்ஷ்டக்கார ராசிகள் இவர்கள்: சனி, செவ்வாயின் அருளால் செல்வம் கொழிக்கும் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR