சனி வக்ர பெயர்ச்சி; 3 ராசிக்கு லாபம், 3 ராசிக்கு நஷ்டம்
Shani Retrograde 2022: சனி பகவான் 2022 ஜூன் 05 ஆம் தேதி கும்ப ராசியில் வக்ரமாக மாறி பயணிக்கவுள்ளார். இந்த பயணமானது 23 அக்டோபர் 2022 வரை இருக்கும். சனியின் இந்த பெயர்ச்சி எந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையை பாதிக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஜோதிடத்தின் படி, சனியின் ஒவ்வொரு அசைவும் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சமீபத்தில் சனி பகவான் ஏப்ரல் மாதம் தனது சொந்த ராசியான கும்பத்தில் நுழைந்தார். இந்த ராசி மாற்றம் ஏப்ரல் 29-ம் தேதி நடைபெற்றது. இப்போது சனி பகவான் மிக விரைவில் கும்ப ராசியில் வக்ரமாக மாறி பயணிக்கவுள்ளார்.
இந்த நிலையில் சனியின் வக்ர பெயர்ச்சி 12 ராசிகளையும் பாதிக்கும். இது சிலருக்கு நல்ல பலனையும், சிலருக்கு அசுபத்தையும் ஏற்படுத்தும். எனவே சனி பகவான் 2022 ஜூன் 05 ஆம் தேதி கும்ப ராசியில் வக்ரமாக மாறி பயணிக்கவுள்ளார். இந்த பயணமானது 23 அக்டோபர் 2022 வரை இருக்கும். சனியின் இந்த பெயர்ச்சி எந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையை பாதிக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | செவ்வாய் - சனி கூட்டணி: மே 17 வரை சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்
சனி வக்ர பெயர்ச்சி யாருக்கு சாதகம்
ரிஷபம் - இந்த ராசிக்காரர்கள் சனியின் வக்ர பெயர்ச்சியால் நன்மை பெறுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல நேரம். கடின உழைப்பின் முழு பலன் தெரியும். நல்ல செய்திகள் கிடைக்கலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. சனியின் இந்த பெயர்ச்சி வியாபாரிகளுக்கும் சாதகமாக இருக்கும்.
கன்னி - இந்த ராசிக்காரர்களுக்கும் சனியின் பாக்கியம் கிடைக்கும். நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். தற்போதைய வேலையில் சில மாற்றங்களைச் செய்ய நினைத்தால், இதுவே சாதகமான நேரம். புதிய வேலையை தொடங்கலாம். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம்.
மகரம் - நீங்கள் புதிய வேலையைத் தொடங்க நினைத்தால், இதுவே சாதகமாணா நேரம். பணியிடத்தில் உங்கள் பிம்பம் வலுவாக இருக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி காணப்படுகிறது.
சனி வக்ர பெயர்ச்சி யாருக்கு பாதகம்
மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்காது. கடின உழைப்பின் பலன் சரியாக கிடைக்காது. சில வேலைகளில் தடைகளை சந்திக்க நேரிடும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.
கடகம் - சனியின் வக்ர பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்காது. பண பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும். பணம் தொடர்பான எந்த முடிவையும் கவனமாக எடுங்கள். இல்லையெனில், சேதம் ஏற்படலாம்.
சிம்மம் - குடும்ப வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம். இதன் காரணமாக உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் மற்றும் மன அழுத்தம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரர்கள் தலைவிதி மாறும், பண மழை பொழியும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR