கர்மவினை அளிப்பவர் சனி பகவான். இவர் விரைவில் மகர ராசியில் உதிக்கப் போகிறார். ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒரு கிரகம் உதயமாகும் போதெல்லாம், அதன் சுப பலன்கள் அதிகரிக்கும். பிப்ரவரி 22ஆம் தேதி சனியின் உதயம் நிகழும். இதன் பிறகு வரும் ஏப்ரல் 29ம் தேதி சனி தனது ராசியை மாற்றுகிறார். சனியின் உதயத்தால் எந்தெந்த ராசிக்காரர்கள் ஜொலிக்கப் போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு செல்வம் உயரும் வாய்ப்புகள் அதிகம். முடிக்கப்படாத பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணங்களால் நல்ல வருமானம் பெறுவீர்கள். இந்த நேரத்தில், முதலீட்டில் இருந்து மிகப்பெரிய நன்மைகள் காணப்படும். எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். பணியிடத்தில் உங்கள் செயல்திறன் சிறப்பாக இருக்கும். சில பெரிய சாதனைகளை அடையலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பளம் உயரும் வாய்ப்புகள் உண்டு.


மேலும் படிக்க | இந்த 5 ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும் 


மிதுனம்: இந்த ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் இனிமையானதாக இருக்கும். ஒவ்வொரு செயலிலும் வெற்றி கிடைக்க வாய்ப்பு உண்டு. புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். மேலதிகாரியுடன் நல்லுறவு இருக்கும். நிர்வாகப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு இது ஒரு நல்ல நேரம். இந்தக் காலத்தில் பெரிய பதவியைப் பெறலாம். மொத்தத்தில் நல்ல நேரம்.


துலாம்: நிதிநிலை முன்பை விட வலுவாக இருக்கும். பணிச்சுமை அதிகரிக்கும், ஆனால் எதிர்காலத்தில் இந்த வேலையின் மூலம் நீங்கள் பெரிய பலன்களைப் பெறுவீர்கள். எந்த முதலீட்டிலும் நல்ல பணம் கிடைக்கும். பல வழிகளில் பணம் பெறலாம்.


கும்பம்: சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு. செலவுகளைக் கட்டுப்படுத்தி வெற்றி பெறுவீர்கள். பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். புதிய வேலை கிடைக்கலாம். இந்த நேரம் வணிகர்களுக்கும் வெற்றிகரமானதாக இருக்கும். கடந்த காலத்தில் நீங்கள் எடுத்த முயற்சிகளின் பலனை இப்போது பெறுவீர்கள்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அடித்தது ஜாக்பாட்: பண மழை, அன்பு மழை பொழியும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR