Fixed Deposit Interest Rates: கனரா வங்கியில் நிலையான வைப்புத்தொகையுடன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தியாக. கனரா வங்கி பிக்ஸட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை மாற்றியுள்ளது, இந்த மாற்றம் ஆகஸ்ட் 8, 2021 முதல் 2 கோடிக்கும் குறைவான வைப்பு தொகைக்கு பொருந்தும். கனரா வங்கி 46 முதல் 90 நாட்கள் முதிர்வு காலத்துடன் கூடிய வைப்புத்தொகையைத் தவிர அனைத்து வைப்புகளுக்கும் வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கனரா வங்கி FD களுக்கான புதிய வட்டி விகித விபரம்


வட்டி விகிதங்களில் மாற்றத்திற்குப் பிறகு, தற்போது கனரா வங்கி 7-45 நாட்கள் முதிர்வுடன் கூடிய கால வைப்புத்தொகைக்கு 2.90 சதவீத வட்டியை வழங்குகிறது. இது தவிர, 46-90 நாட்கள் முதிர்வுக்கு 3.9 சதவிகிதமும், 91 முதல் 179 நாட்கள் வரையிலான 3.95 சதவிகிதமும், 180 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவான முதிர்வு காலத்துடன் 4.40 சதவிகிதமும் கிடைக்கும்.


இது தவிர, வங்கி வட்டி விகிதங்களை 10 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது, அதாவது 1 வருடத்தில் இருந்து 2 வருடங்களுக்கு குறைந்த காலத்திற்கான நிலையான வைப்புத்தொகையில் 0.1 சதவீதம் குறைந்துள்ளது. இப்போது இந்த நிலையான வைப்புகளுக்கு வங்கி 5.10 சதவீத வட்டியை வழங்குகிறது. கனரா வங்கி இரண்டு வருடம் முதல் மூன்று வருடம் காலத்திற்கான நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை 30 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. வங்கி இப்போது 2 வருடங்கள் முதல் 3 வருடங்கள் வரையில் பிக்ஸட டெபாஸிட்களுக்கு 5.10 சதவிகித வட்டி வழங்குகிறது.


ALSO READ: Income Tax Return: வருமான வரி தாக்கல் செய்கையில் ஏற்படும் பொதுவான தவறுகள்..!!


புதிய கட்டணங்கள் 8 ஆகஸ்ட் 2021 முதல் அமல்


கனரா வங்கி 3 ஆண்டுகளில் இருந்து 5 வருடங்களுக்கும் குறைவான காலத்திற்கான நிலையான வைப்பு தொகைக்கான வட்டியை 0.25 சதவீதம் அல்லது 25 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. இப்போது இந்தக் காலத்திற்கு, வாடிக்கையாளர்களுக்கு 5.25 சதவீத வட்டி மட்டுமே கிடைக்கும், இது முன்பு 5.5 சதவீதமாக இருந்தது. கனரா வங்கி நிலையான வைப்புகளுக்கான புதிய வட்டி விகிதம் ஆகஸ்ட் 8, 2021 முதல் அமலுக்கு வருகிறது. 


ALSO READ | Auto Insurance விதிகளில் மாற்றம்: பம்பர்-டு-பம்பர் காப்பீடு என்றால் என்ன..!!


கனரா வங்கி FD தொகைக்கான புதிய வட்டி விகிதம்


7 நாட்கள்- 45 நாட்கள் 2.90%
46 நாட்கள் - 90 நாட்கள் 3.90%
91 நாட்கள் - 179 நாட்கள் 3.95%
180 நாட்கள் - 1 வருடத்திற்கும் குறைவான காலத்திற்கு 4.40%
1 வருடம் - 2 வருடங்களுக்கும் குறைவான காலத்திற்கு 5.10%
2 ஆண்டுகள் - 3 வருடங்களுக்கும் குறைவான காலத்திற்கு 5.10%
3 ஆண்டுகள் - 5 வருடங்களுக்கும் குறைவான காலத்திற்கு 5.25%
5 ஆண்டுகள் - 10 ஆண்டுகளுக்கும் மேலான காலத்திற்கு 5.25%


திருத்தப்பட்ட வட்டி விகிதங்களுக்குப் பிறகு, மூத்த குடிமக்கள் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை உள்ள காலத்திற்கான FD களுக்கு 2.90 சதவீதம் முதல் 5.75 சதவீதம் வரை வட்டி விகிதத்தைப் பெறுவார்கள். கனரா வங்கி 180 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் FD களில் சாதாரண வாடிக்கையாளர்களை விட மூத்த குடிமக்களுக்கு 50 அடிப்படை புள்ளிகள் அதிக வட்டி வழங்குகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


ALSO READ: ITR: வருமான வரி தாக்கல் செய்வதில் நீடிக்கும் சிக்கல்; காலக்கெடு நீட்டிக்கப்படுமா..!!


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR