பச்சரிசி மாவையும், வெல்லச் சர்க்கரையும், ஏலக்காய் போன்ற பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து, அதில் சிறிது நெய் விட்டு மாவாகப் பிசைந்து, அந்த மாவை வாழை இலையின் நடுவில் பரப்பி, நடுப்பகுதியில் குழிபோல் செய்து அதில் நெய் விட்டுத் திரி போட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்வதே மாவிளக்கு போடுதல் என்று கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. ஆடி வெள்ளியன்று (Friday) அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து அருள்புரிவாள் என்பது ஐதீகம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் முன்னர் இவ்வாறு குலதெய்வத்துக்கு மாவிளக்கு போட்டுப் பிரார்த்தனை செய்து கொள்வதால், நிகழ்ச்சிகள் தடங்கலின்றி நடக்கக் காரணமாக அமையும் என்றும் நம்பப்படுகிறது.


ALSO READ | “ஓம்” என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரிப்பதால் உண்டாகும் பலன்கள்!


ஒவ்வொரு குடும்பத்திலும் வருடத்துக்கு ஒருமுறை குலதெய்வ சன்னிதியில் அல்லது தனது வீட்டில் நல்ல நாள் பார்த்து அம்பாள் (Goddess Lakshmi) சன்னிதியில் மாவிளக்கு தீபம் ஏற்றுவது  குடும்பத்தில் மென்மேலும் நன்மைகள் அதிகரிக்கக் காரணமாக அமையும்.



அக்னி பகவான், நெய்யில் வாசம் செய்கிறார் என்பது ஐதீகம். நெய்யை விட்டுதான் ஹோமங்கள் வளர்க்கிறோம். ஹோமங்கள் மூலம் நாம் சமர்ப்பிக்கும் பொருட்களை அக்னியே உரிய தேவதைகளிடம் சேர்க்கிறார். அக்னி பகவானின் சக்தி, நெய்யில் அடங்கிஉள்ளது. மாவிளக்கில் ஜோதியாக நின்று ஒளிரும் ஜோதி ஸ்வரூபமாக அம்பிகை, நம் இல்லங்கள் தோறும் அருள்புரிவதற்காகவே மாவிளக்கு ஏற்றுகிறோம்.


மாவிளக்கு செய்வது எப்படி?
ஒரு கிலோ அரிசியில் தண்ணீர் விட்டு களைந்து, ஒரு துணியில் பரப்பி காயவைக்கவும். பிறகு லேசான ஈரப்பதத்துடன் இருக்கும்போது, அந்த அரிசியை அரைத்து எடுத்துக் கொள்ளவும். மாவு அரைக்கும் போது நான்கு, ஐந்து ஏலக்காயை சேர்த்து அரைக்கவும். ஒரு கிலோ அரிசிக்கு முக்கால் கிலோ வெல்லம் போட வேண்டும். வெல்லத்தை துருவி அரிசி மாவுடன் கலந்து வைக்கவும்.


ALSO READ | குழந்தை பாக்கியம் அருளும் முக்கிய திருத்தலங்கள் ஒரு பார்வை!


பின்னர் அதனை நன்றாக பிசைந்து உருண்டையாக உருட்டவும். அந்த உருண்டையின் மீது எலுமிச்சைப் பழத்தை வைத்து அழுத்தினால், சிறிய குழிபோல் அச்சுப் பதியும். அந்த குழியின் ஓரத்தில் மூன்று இடத்தில் குங்குமம் கொண்டு பொட்டு வைத்து, குழியில் நெய் ஊற்றி, திரி போட்டு விளக்கேற்ற வேண்டும். வீட்டில் மாவிளக்கு ஏற்றும்போது, பூஜை அறையில் கோலம் போட்டு, அதன் மீது வாழை இலை விரித்து, அதில் மாவிளக்கை வைக்க வேண்டும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR