ஒரு பெண்ணுக்குத் திருமணமானவுடன் குழந்தை பிறக்க வேண்டும். அதுதான் அவருக்குத் தனிப்பட்ட மகிழ்ச்சியையும், இருவீட்டாரிடமும் பரஸ்பரம் ஒரு நெருக்கத்தையும் உண்டாக்கும். அம்மன் என இறைவியை அழைத்தன் காரணம் ‘அவள் நம் அன்னை’ எனும் எண்ணமே இதன் வெளிப்பாடு. குழந்தைச் செல்வம் என்பது பாக்கியம்.
சில பெண்களுக்கு சில காரணங்களால் தாய்மை அடையும் வாய்ப்பு தள்ளிப் போகிறது. அந்தவகையில் அனைத்து உயிருக்கும் அன்னையாய் இருக்கும் அம்பிகையின் கீழ்க்கண்ட திருத்தலங்களுக்குச் (Temple) சென்று வழிபடும்போது இந்த பிரச்னை விலகுகிறது.
ALSO READ | புராணக்கதை! சனிக்கிழமை சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது சரியா?
கருவளர்சேரி
தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள ‘கருவளர்சேரி’ என்ற ஊரில் ‘அருள்மிகு அகிலாண்டேஸ்வரி’ தாயாக அருள்பாலிக்கிறாள். கருவளர்சேரி திருத்தலத்துக்கு வந்து அம்பிகையை வழிபடுவோருக்கு உடல்ரீதியான தோஷங்கள் அனைத்தையும் விலக்கி குழந்தை வரத்தை அருளுகிறாள் அன்னை அகிலாண்டேஸ்வரி. கர்ப்பம் தரித்த பெண்களும் இங்கு வந்து வழிபடுவதால், சிக்கலற்ற பிரசவம் நடக்கும்.
திருக்கருகாவூர்
திருக்கருகாவூரில் கருகாக்கும் நாயகியாய் அருள்பாலிப்பவள் கர்ப்பரட்சாம்பிகை. கரும்பைப் போல் இனிமையானவள் என்பதால் அம்பிகைக்கு கரும்பணையாள் என்ற திருப்பெயரும் உண்டு. குழந்தை பாக்கியம் தடைப்படும் பெண்கள், இங்கே கோயில் கொண்டிருக்கும் அன்னை கருக்காத்த நாயகியை பக்தியோடு மனமுருக வேண்டி, நெய்யினால் சந்நிதியின் படிகளை மெழுகி, கோலமிட்டு, அர்ச்சனை செய்ய வேண்டும். அம்மன் பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட நெய்யினை 45 நாள்கள் உண்டு வந்தால், குழந்தைப்பேறு கிட்டும்.
புலிக்கால்-நாகயாஷியம்மன்
திருமணமாகி குழந்தை பேறு இல்லாமல், தவிப்பவர்களுக்கு அருள் புரியும் புலிக்கால் நாகயாஷியம்மன் கோவில். கேரள மாநிலம் பாலக்காடு அருகே மலப்புரம், கோழிக்கோடு செல்லும் சாலையில் புலிக்காடு நாகயாஷியம்மன் கோவில் அமைந்துள்ளது. வனப்பகுதியில் அமைந்திருக்கும் கோவிலில் அம்மன் சுயம்பாக தோன்றி அருளுகிறார். அம்மனை மனமாற பிரார்தித்து வந்தால், நிச்சயம் குழந்தை பேறு கிடைக்கும் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.
ALSO READ | குலதெய்வ பூஜை வழிபாட்டின் முக்கியத்துவம்!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR