மதுரை தபால் நிலையத்தில் வேலை வாய்ப்பு - நல்ல சம்பளம்; வாய்ப்பை தவறவிடாதீர்கள்
மதுரை தபால் நிலையத்தில் Skilled Artisans பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை மாவட்ட தலைமை அஞ்சல் நிலையத்தி காலியாக உள்ள Skilled Artisans பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இங்கு மொத்தம் 7 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, M.V.Mechanic (Skilled) – 1 பணியிடங்கள், M.V.Electrician – 2 பணியிடங்கள், Painter (Skilled) – 1 பணியிடம், Welder – 1 பணியிடம், Carpenter – 2 பணியிடங்கள் என ஒதுக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட காலி பனியிடங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை மற்றும் எந்த காரணமும் தெரிவிக்காமல் அறிவிப்பை மாற்ற/ரத்துசெய்யும் உரிமை உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
01.07.2022 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30க்குள் இருக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு 40 ஆண்டுகள்வரை வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு தொழில்நுட்ப நிறுவனத்திலிருந்தும் பணிக்கு தொடர்புடைய வர்த்தகத்தில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று பணிக்கு தொடர்புடைய வர்த்தகத்தில் ஒரு வருட அனுபவம் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் Competitive Trade Test முலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். பாடத்திட்டம், தேதி, இடம் & காலம் போன்றவை தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பள விவரம்:
Skilled Artisans – ரூ.19,900 முதல் ரூ.63200வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஒன்றுக்கும் மேற்பட்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் ஒவ்வொரு பணிக்கும் தனித்தனி விண்ணப்பத்தை தனித்தனி உறையில் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். தகுதியானவர்கள் தங்களின் விண்ணப்ப படிவத்தை முறையாக பூர்த்தி செய்து அஞ்சல் மோட்டார் சேவை, CTO வளாகம், தல்லாக்குளம், மதுரை-625002 என்ற முகவரிக்கு ஸ்பீட் போஸ்ட் மற்றும் பதிவு செய்யப்பட்ட தபால் மூலம் மட்டும் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க | அசத்தும் இந்திய ரயில்வே; வாட்ஸ்அப்பில் PNR, ரயிலின் நிலை அறிந்து கொள்ளும் வசதி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ