சனி அமாவாசையில் நிகழும் சூரிய கிரகணம்; உஷாராக இருக்க வேண்டிய ராசிகள்
2022ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த சூரிய கிரகணம் மேஷ ராசியில் நிகழும்.
2022ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30ஆம் தேதி நிகழவுள்ளது. சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரியன் முழுமையாகவே, பகுதி அளவிலோ மறைக்கப்பட்டிருக்கும் நிகழ்வு சூரிய கிரகணம் என்றழைப்படுகிறது. இந்து நாட்காட்டியின் படி, இந்த கிரகணம் சனி அமாவாசை அன்று நடைபெறுகிறது. அதற்கு ஒரு நாள் முன்னதாக சனி தனது ராசியை மாற்றிக் கொண்டிருப்பதாலும் மிகவும் முக்கியமானது. இந்த சூரிய கிரகணத்தின் போது, குருவின் பார்வை பெற்றிருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
இந்த சூரிய கிரகணம் சரியாக மதியம் 12:30 மணிக்கு துவங்கி மாலை 4 மணி வரை நிகழும். இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது. ஆனால் அட்லாண்டிக், அண்டார்டிகா, தென் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதி மற்றும் பசிபிக் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் இருந்து காணலாம். எனவே கிரகங்களின் நிலை காரணமாக குறிப்பிட்ட ராசிக்காரர்கள் சூரிய கிரகணம் மற்றும் சனி அமாவாசை தினங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ஒரே நாளில் நிகழும் சூரிய கிரகணம், சனி அமாவாசை
பஞ்சாங்கத்தின்படி, ஏப்ரல் 30, சனிக்கிழமை அமாவாசை ஆகும். சனி அமாவாசை அன்று புனித நதிகளில் நீராடுவது, தானம் செய்வது, த்யானம் செய்வது வழக்கம். இவ்வாறு செய்வதன் மூலம் புண்ணிய பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். அமாவாசை திதியில் முன்னோர்களுக்கு தவச சடங்குகளும் செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு சனி அமாவாசை அன்று சனிபகவானை வழிபட சிறப்பு பலன் கிடைக்கும். இந்த நாளில் சனிபகவானை வழிபடுவது ஏழரை சனி மற்றும் சனி தசையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கும்.
மேலும் படிக்க | குரு பெயர்ச்சி 2022: செல்வ செழிப்பில் மிதக்க போகும் 6 ராசிக்காரர்கள்
இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்-
மேஷம் - மேஷ ராசியில் சூரிய கிரகணம் ஏற்படும். எனவே, இந்த மேஷ ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த கிரகணத்தின் போது பயணம் செய்வதை தவிர்த்து கவனமாக இருக்கவும்.
கடகம் - கடகம் ராசி சந்திரனால் ஆளப்படுகிறது. இந்த நேரத்தில் சந்திரன் ராகுவுடன் மேஷ ராசியில் இருப்பார். இந்த நிலை மன அழுத்தத்திற்கு ஆளாக்கும்.
விருச்சிகம்- விருச்சிக ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணத்தின் தோஷம் ஏற்படும். எனவே இந்த நேரத்தில் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.
சூரிய கிரகணத்தின் விளைவுகள் மற்றும் பரிகாரங்கள்
இந்த மூன்று ராசிக்காரர்கள் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கலாம். இஷ்ட தெய்வத்தை வணங்க வேண்டும். சூரிய கிரகணத்தின் போது உங்கள் சிந்தனையை நேர்மறையாக வைத்து தானம் செய்யுங்கள்.
கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை
தர்ப்பை அல்லது துளசி இலைகளை உணவு மற்றும் தண்ணீரில் போடவும். அதனால் கிரகணத்தின் எதிர்மறை தாக்கம் அதில் ஏற்படாமல் இருக்கும். கிரகணத்திற்குப் பிறகு அவற்றை உட்கொள்ளலாம்.
கிரகணத்தின் போது, கடவுள் வழிபாட்டில் அதிகபட்ச நேரத்தை செலவிடுங்கள்.
வீட்டின் பூஜை அறை கதவை மூடி வைக்கவும். அப்போது கோவில்களின் கதவுகளும் மூடப்பட்டிருக்கும்.
கிரகணம் முடிந்ததும் குளித்து விட்டு தான் பிற வேலைகளை தொடங்க வேண்டும்.
கிரகண காலத்தில், ஸ்தோத்திரங்கள் சொல்வதனா, கிடைக்கும் பலன்கள் பன்மடங்காகும்.
மேலும் படிக்க | சூரியனின் சஞ்சாரத்தால் குபேரனாகப் போகும் 3 ராசிக்காரர்கள்
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR