தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்புக்குரிய மாதமாக பார்க்கப்படும் தை மாதத்தில் முதல் நாளே பொங்கல் கொண்டாட்டத்துடன் தொடங்கியுள்ளது. தை பிறந்தாலே வழி பிறக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப தை முதல் நாளிலேயே சூரிய பகவான் தட்சிணாயண பாதையில் இருந்து உத்தராயண பாதைக்கு அடி எடுத்து வைத்துள்ளார். இதை உத்தராயண புண்ணிய காலம் என்று கூறுவார்கள். தை மாதத்தின் முதல் மூன்று நாட்களுமே பொங்கல் விழாவாக தொடங்குவது மட்டுமல்லாமல் தை அமாவாசை, தைப்பூசம் உள்ளிட்ட விஷேஷ நாட்களும் இம்மாதத்தில் இருக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | உழவர் திருநாளுக்கு உழவர் சந்தையை நோக்கி படையெடுக்கள் பொதுமக்கள் 


அதனால், இம்மாதத்தில் இருக்கும் முக்கிய விரத நாட்களையும் விஷேச நாட்களையும் முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். பொங்கல் முடித்தவுடன் அடுத்தடுத்து வர இருப்பது தை அமாசவாசையும், தை பூசமும் தான். ஆடி அமாவாசைக்கு அடுத்தபடியாக வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது தை அமாவாசை. அன்று பித்ருக்கள் கடன் செய்ய மிக சிறப்பான நாள். தை அமாவாசை விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் கண்டிப்பாக கிடைக்கும்.


தை மாதத்தில் ரத சப்தமி விரதம் இருந்து சூரியனை வழிபட்டால் நம் உடலில் பிடித்திருக்கும் நோய்கள் அகலும். தை மாத செவ்வாய் கிழமைகளில் வீரபத்ர வழிபாடு செய்தால் தடைகள் விலகுவதோடு எதிர்ப்புகளும் அகலும். எதிரிகள் இல்லாமல் போவார்கள். தை மாத வளர்பிறையில் வரும் பஞ்சமி, வசந்த பஞ்சமி ஆகும். இது சரஸ்வதி தேவி அவதரித்த நாள். இந்த நாளில் விரதம் இருந்தால் கல்வியில் சிறந்து விளங்கலாம்.


மேலும், தை மாத தேய்பிறை ஏகாதசிக்கு ஷபலா ஏகாதசி என அழைக்கபடுகிறது. அன்று விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபட்டால் சகலதோஷங்களும் பாவங்களும் நீங்கும். சாவித்திரி கௌரி விரதத்தை தைமாதம் இரண்டாம் நாள் கடைப்பிடித்தால் ஆயுள் விருத்தி உண்டாகும். 


தை மாதத்தில் வரும் முக்கிய நாட்கள்


தை 1 : உத்ராயண புண்ணிய காலம், பொங்கல் பண்டிகை 
தை 2 : மாட்டுப் பொங்கல்
தை 3 : காணும் பொங்கல்
தை 4 : ஷபலா ஏகாதசி 
தை 7 : தை அமாவாசை , முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய உகந்த நாள் 
தை 8 : சியாமள நவராத்திரி பூஜை ஆரம்பம் 
தை 11 : வசந்த பஞ்சமி 
தை 12 : வீடு கட்ட வாஸ்து செய்ய ஏற்ற நாள்
தை 14 : ரத சப்தமி, சூரிய ஜெயந்தி 
தை 16 : தை கிருத்திகை,   
தை 18 : ஜெய ஏகாதசி 
தை 19 : பீம துவாதசி, பீஷ்ம துவாதசி 
தை 20 : ஸ்ரீரங்கம் பூபதித்தேர் 
தை 22 : தைப்பூசம், வடலூர் ஜோதி தரிசனம் 
தை 27 : கூரத்தாழ்வார்


மேலும் படிக்க | Happy Pongal 2023: பொங்கல் பண்டிகை அன்று இந்த உணவுகளை ட்ரை பண்ணி பாருங்கள்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ