புதுடெல்லி: 42,000 காலிப் பணியிடங்களை நிரப்புவதாக பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது, இந்தக் காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு 2022 க்குள் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, 15,247 பணிகளுக்கான நியமனக் கடிதங்களும் அடுத்த சில மாதங்களில் வழங்கப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கும் கூடுதலாக 67 ஆயிரத்து 768 பணியிடங்களை நிரப்பவும்  பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இந்த பணி நியமனங்கள் நடைபெறும்.  


ராணுவத்தின் 'அக்னிபத்' திட்டத்திற்கான எதிர்ப்புகள் தொடர்ந்துக் கொண்டிருப்பதற்கு இடையில் பணியாளர் தேர்வாணையம் 42,000 பணியிடங்களை நிரப்புவதாக அறிவித்துள்ளது.


மேலும் படிக்க | OPGC Recruitment 2022: பொறியியல் பணிகளுக்கான வேலைவாய்ப்பு


இந்த அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமை பத்திரிகை தகவல் பணியகத்தின் (PIB) ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது. அதில், "42,000 பணியிடங்களுக்கான ஆட் சேர்ப்பு டிசம்பர் 2022 க்கு முன் முடிக்கப்படும். இது தவிர, விரைவில் 67 ஆயிரத்து 768 காலியிடங்கள் விரைவில் வரவிருக்கும் தேர்வின் மூலம் நிரப்பவும் எஸ்எஸ்சி (SSC Recruitment 2022) திட்டமிட்டுள்ளது."


15,247 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு கடிதங்கள் விரைவில் வழங்கப்படும் என பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அடுத்த சில மாதங்களில் மத்திய அரசின் பல்வேறு துறைகள் மூலம் பணி நியமன கடிதம் வழங்கப்படும். இந்த அறிவிப்புக் குறித்த விரிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.


 இராணுவத்தின் குறுகிய கால ஆள்சேர்ப்புத் திட்டமான 'அக்னிபத்' தொடர்பான போராட்டங்கள் நாடு முழுவதும் உக்ரமாக உள்ள நிலையில்,  வேலை தேடுபவர்களுக்கு இந்த அறிவிப்பு சற்று நிவாரணம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணிகளுக்கான வேலைவாய்ப்பு: 12 லட்ச ரூபாய் சம்பளத்தில் பணி


பிரதமர் நரேந்திர மோடி அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் அரசுப் பணியிடங்களுக்கு பணியாளர்களை நியமிப்பதாக சமீபத்தில் அறிவித்தார். அதன்பின், 'அக்னிபத்' திட்டம் அறிவிக்கப்பட்டது.


இம்முறை, பணியாளர் தேர்வாணையமும் ஆட்சேர்ப்பு செய்வதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புகள் அனைத்தும், கொரோனா தொற்று நோய் பரவலுக்கு பிறகு வேலைவாய்ப்புகள் குறைந்திருக்கும் நிலையில் இளைஞர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும்.


அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்: இந்த ஆண்டு அக்டோபருக்குள் 42,000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது என்ற செய்தி பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் என்று கருதப்படுகிறது.


மேலும் படிக்க | இந்திய தபால் துறையில் 38926 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe