Business Idea:  நீங்களும் சொந்தமாக தொழில் தொடங்க விரும்பினால் இந்த செய்தி உங்களுக்கானது. அதிக முதலீடு தேவைப்படாத ஒரு தொழிலைப் பற்றி உங்களுக்கு இன்று நாங்கள் யோசனையை வழங்க உள்ளோம். இந்த தொழிலில், குறைந்த பணத்தை முதலீடு செய்து வீட்டில் இருந்தபடியே நல்ல லாபம் சம்பாதிக்கலாம். மிகவும் குறைவான தொகையை வைத்து மிகப்பெரிய லாபத்தை தரும் தொழில்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வணிகத்தின் (Business Ideas) நோக்கம் மிகப்பெரியது. உலகளவில், ஒவ்வொரு ஆண்டும் 2 பில்லியன் டன்களுக்கும் அதிகமான கழிவுப் பொருட்கள் உருவாகின்றன. அதே நேரத்தில், இந்தியாவிலும் 277 மில்லியன் டன்களுக்கும் அதிகமான குப்பைகள் உருவாகின்றன. இந்த குப்பைகளை மறுசுழற்ச்சி (Recycling Business Ideas) செய்யும் தொழிலுக்கு வருங்காலத்தில் மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. குப்பைகளை மறுசுழற்ச்சி செய்யும் தொழில் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.


வீட்டு இருக்கும் குப்பைகளிலிருந்து இந்தத் தொழிலைத் தொடங்கலாம். இந்த தொழில் பல மில்லியனர்களை உருவாக்கியுள்ளது என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம். வாருங்கள் இந்தத் தொழிலை எப்போது, ​​எங்கு தொடங்குவது என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.


ALSO READ |  ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் சூப்பர் தயாரிப்பு! பிளாஸ்டிக்கிற்கு குட்பை!


ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவிலும் 277 மில்லியன் டன்களுக்கும் அதிகமான குப்பைகள் உருவாகுவதால், இவ்வளவு அதிகமான குப்பைகளை கழிவு மேலாண்மை மூலம் மறுசுழற்ச்சி செய்வது என்பது மிகவும் கடினமான விஷயம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், தற்போது வீட்டு அலங்காரப் பொருட்கள், நகைகள் மற்றும் கழிவுப் பொருட்கள் மூலம் ஓவியங்கள் உட்பட பல பொருட்களை தயாரித்து, இதை வியாபாரமாக பலர் மாற்றியுள்ளனர். பலர் தங்களின் எதிர்காலத்தை குப்பை மறுசுழற்ச்சி தொழிலில் ஈடுபடுத்தி, இன்று லட்சக்கணக்கில் லாபம் சம்பாதித்து வருகின்றனர்.


நீங்கள் குப்பையிலிருந்து நிறைய தயாரிப்புகளை உருவாக்கலாம். உதாரணமாக, டயர்களில் இருந்து ஒரு இருக்கை நாற்காலியை உருவாக்கலாம். அமேசானில் இதன் விலை சுமார் 700 ரூபாய். இது தவிர, கோப்பைகள், மர கைவினைப்பொருட்கள், கேட்டில்கள், கண்ணாடிகள், சீப்புகள் மற்றும் பிற வீட்டு அலங்கார பொருட்களை தயார் செய்யலாம். அடுத்து அதை சந்தைப்படுத்த வேண்டும். இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனை செய்யலாம். நீங்கள் தயாரித்த பொருட்களை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்கலாம். இது தவிர, ஓவியங்கள் மீது ஆர்வம் இருந்தால், நீங்கள் வெவ்வேறு வண்ணங்களில் செய்யலாம்.


ALSO READ |  உங்கள் வியாபாரம் செழிக்க மிக எளிய ‘5’ ஜோதிட பரிகாரங்கள்..!


இந்தத் தொழிலைத் தொடங்க, முதலில் உங்கள் வீடுகளிலும், உங்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள கழிவுப் பொருட்களையும் குப்பைகளைச் சேகரிக்க வேண்டும். அதைத்தவிர வேண்டுமானால் மாநகராட்சியில் இருந்தும் கழிவுகளை எடுத்துக் கொள்ளலாம். அதேபோல பல வாடிக்கையாளர்கள் கழிவுப் பொருட்களையும் வழங்குகிறார்கள். அவர்களிடமிருந்தும் நீங்கள் வாங்கலாம். அதன் பிறகு அந்த குப்பையை சுத்தம் செய்யுங்கள். பிறகு அதையே வெவ்வேறு டிசைனிங் மற்றும் கலரிங் செய்யுங்கள்.


இதுக்குறித்து "தி கபடி.காம்" (The Kabadi.com) ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் உரிமையாளர் சுபம் கூறுகையில், ஆரம்பத்தில் ரிக்ஷா, ஆட்டோ மூலம் மூன்று பேருடன் வீடு வீடாக சென்று குப்பைகளை வாங்கி வர ஆரம்பித்தோம். இன்று இந்த தொழில் மூலம் ஒரு மாதத்திற்கு எட்டு முதல் பத்து லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க முடிகிறது. இந்த நிறுவனங்கள் ஒரு மாதத்தில் 40 முதல் 50 டன் அளவிலான குப்பைகளை சேகரிக்கின்றன.


ALSO READ |  2022-ல் ஷாப்பிங் செய்வது மிகவும் கடினம் - ஏன்?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR