2022-ல் ஷாப்பிங் செய்வது மிகவும் கடினம் - ஏன்?

ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவல் காரணமாக அடுத்த ஆண்டில் ஷாப்பிங் செய்து விருப்பப்பட்ட பொருட்களை வாங்குவது கடினமான ஒன்றாக இருக்கப்போவதாக கூறப்படுகிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 23, 2021, 08:40 PM IST
  • ஒமிக்ரான் வைரஸானது சில்லறை விற்பனை மற்றும் சுற்றுப்பயணங்களில் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.
  • பல வணிகர்கள் பொருட்களின் இழப்பீடை குறைக்கும் பொருட்டு பொருட்களுக்கு அதிரடி ஆபர்களை அறிவித்து வருகின்றனர்.
2022-ல் ஷாப்பிங் செய்வது மிகவும் கடினம் - ஏன்? title=

கடந்த 2020-ம் ஆண்டில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் தேவையான அடிப்படை பொருட்களை வாங்கி மக்கள் சேமித்து வைத்திருந்தனர்.  அதனையடுத்து மீண்டும் 2021-ல் ஷாப்பிங் செய்ய தொடங்கியதன் எதிரொலியாக லிப்ஸ்டிக் போடுதல், பற்களை வெண்மையாக்குதல், புதிய உடைகளை வாங்குதல் போன்றவற்றை மக்கள் செய்ய தொடங்கினர்.  இதன் மூலம் ஷாப்பிங் பிரியர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பானதாக அமைந்தது.

ALSO READ | பொதுவெளியில் டேட்டிங் செய்ய கூடாது! ஸ்பைடர்மேன் தயாரிப்பாளர் எச்சரிக்கை!

ஆனால் தற்போது வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் சாதகமற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.  இந்த ஒமிக்ரான் வைரஸானது சில்லறை விற்பனை மற்றும் சுற்றுப்பயணங்களில் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.  இந்த தொற்று தீவிரமடைவது ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு புறம் இதன் பின்விளைவுகள் எக்கச்சக்கமாக உள்ளன, அதில் முக்கியமானது சேமிப்புகள் கரைந்து மக்களிடையே பணவீக்கம் ஏற்பட்டு அதிகளவில் கடன் வாங்கும் நிலை ஏற்படக்கூடும்.  எடுத்துக்காட்டாக பிரிட்டிஷ் விற்பனையாளரான Currys Plc கூறுகையில், மின்னணு சாதனங்களுக்கான தேவை எதிர்பார்த்ததை விட பலவீனமாக உள்ளது.  அமெரிக்க சில்லறை விற்பனை நவம்பரில் எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவாக உள்ளது.

shopping

பல வணிகர்கள் பொருட்களின் இழப்பீடை குறைக்கும் பொருட்டு பொருட்களுக்கு அதிரடி ஆபர்களை அறிவித்து வருகின்றனர்.  இருப்பினும் விலைவாசி உயர்வு பொருட்களின் எண்ணிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தியது.  காபி முதல் காபி டேபிள்கள் வரை அனைத்திலும் விரைவான பணவீக்கம் ஏற்பட்டுள்ளது.  இப்போது அனைத்து பொருட்களின் விலைகள் இன்னும் வேகமாக உயர்ந்து வருகின்றன.  

அமெரிக்காவில் மட்டுமல்லாது, 13 ஆண்டுகளில் இல்லாத அளவு. ஐரோப்பாவிலும் இதேபோன்ற விலை அதிகரிப்பும் நடந்து வருகிறது.  சம்பளங்கள் அதிகமாக கொடுக்கப்பட்டாலும் அமெரிக்க பணவீக்கம் அதை விட சற்று தூரம் அதிகமாக உள்ளது.  தொற்று நோய்களின் போது பலரும், குறிப்பாக புதிய வீடுகளுக்கு அதிக செலவு செய்தனர்.  இந்த பணவீக்கத்தை காரணமாக மக்கள் அதிக கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும்,  இதனால் அமெரிக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் பணமதிப்பை இழுக்க வழிவகுக்கும்.  சில்லறை விற்பனையாளர்கள், உணவகங்கள் மற்றும் பார்களுக்கு ஜனவரி எப்போதும் ஒரு மோசமான மாதமாகும்.  ஆனால் இந்த முறை அது மிகவும் கொடூரமானதாக இருக்கும் என்று கூறினார்.

ALSO READ | ‘தாய்மை என்பது பெண்மைக்கு மட்டுமே சொந்தமல்ல’: திருநங்கைக்கு பிறந்த குழந்தை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News