Anti-aging tips, Jackie Chan : சினிமா உலகின் அகில உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கி சான் போல் எப்போதும் இளமையாக இருப்பது என்பது ஈஸியான விஷயமே. அவர் தினமும் கடைபிடித்து வரும் இரண்டு விஷயங்களை ஒருநாள் கூட தவறாமல் செய்தால் போதும் 80 வயதிலும் தோல் சுருக்கங்கள் இல்லாமல் மிகவும் இளமை தோற்றத்துடன் இருக்கலாம். மனதும் மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக இருக்கும். அப்படி என்ன இரண்டு விஷயங்களை ஜாக்கி சான் தவறாமல் கடைபிடித்து வருகிறார் என கேட்கிறீர்களா? உடற்பயிற்சி, உணவில் கட்டுப்பாடு, இந்த இரண்டும் தான். கேட்க சுபலமாக இருப்பதுபோல் தொடர்ச்சியாக கடைபிடித்து வந்தால் நீங்களும் இளமையாக இருக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | வாழ்வில் உருப்பட விரும்பினால் ‘இந்த’ 6 பேரை ப்ளாக் பண்ணுங்க!! யார் யார் தெரியுமா?


ஜாக்கி சான் உடற்பயிற்சி


ஜாக்கி சான் நினைவு தெரிந்த நாளில் இருந்து கடுமையான உடற்பயிற்சிகளை செய்து வருகிறார். 8 வயதில் தற்காப்பு பயிற்சிகளில் வித்தகராக தேர்ச்சி பெற்றுவிட்டார். அதற்காக அதிகாலை எழுந்த ஜாக்கி சான் காலை மாலை என இருவேளைகளிலும் தன்னுடைய தற்காப்பு பயிற்சிகளை செய்திருக்கிறார். சில பயிற்சிகள் மிக கடுமையானவை என்றாலும் அதனை வலிகளை தாங்கிக் கொண்டு செய்திருக்கிறார். அதனால் தான் அவரால் இப்போதும் சுறுசுறுப்பாக இருக்க முடிகிறது. 70 வயதிலும் இளமையானவரை போல் வேகமாக ஓடியாட முடிகிறது. அவரை போல் இல்லையென்றாலும் காலை மாலை உடற்பயிற்சி செய்வதை நீங்கள் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.


உணவுக் கட்டுப்பாடு


ஜாக்கிசான் உணவுக் கட்டுப்பாடு என்பதும் ஈஸியானது தான். தேவைக்கு அதிகமாக சாப்பிடவே மாட்டார். காய்கறி, பழங்கள், சூப் ஆகியவற்றை மட்டுமே எடுத்துக் கொள்வார். மாமிசம், முட்டை ஆகியவற்றை தேவையான அளவு மட்டுமே எடுத்துக் கொள்வார். காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் உணவுகளை பிரித்து சரிவிகித உணவுகளை மட்டுமே சாப்பிடுவார். 


வாழ்க்கை முறைகள்


மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க தியானம் பயிற்சிகளை செய்யும் ஜாக்கி சான், ஒருபோதும் இரவில் நீண்ட நேரம் கண் விழித்திருக்கவே மாட்டாராம். படப்பிடிப்புகளைத் தவிர மற்ற நேரங்களில் இரவு நேர உணவை முன்கூட்டியே எடுத்துக் கொண்டு படுக்கைக்கு சென்றுவிடுவாராம். இரவு நேர உணவும் எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை மட்டுமே சாப்பிடுவாராம். இதனாலேயே கெட்ட கொழுப்பு, வியர்வை வெளியேறுவதில் சிரமம், கழிவுகள் தேங்காமை போன்ற அடிப்படை சிக்கல்களே வராததால் பெரிய ஆரோக்கிய சிக்கல்களையும் எதிர்கொள்ளாமல் இருக்கிறார். அவரைப் போல் நோயற்ற வாழ்வை வாழ நினைத்தால் நீங்களும் இந்த வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள். 


மேலும் படிக்க | Palmistry: இப்படிப்பட்ட விரல் கொண்டவரிடம் இருந்து விலகியிருக்கவும்! ஏமாற்றுக்காரர்கள்!!


மேலும் படிக்க | Anti-Ageing Tips: 60+ வயதிலும்... இளமையாக இருக்க... நீங்கள் சாப்பிட வேண்டியவை..!!


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தரவுகளைஅடிப்படையாகக் கொண்டவை. இவற்றிற்கு ZEE செய்தி எந்த வகையிலும் பொறுப்பேற்காது.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ