Anti-Ageing Tips: 60+ வயதிலும்... இளமையாக இருக்க... நீங்கள் சாப்பிட வேண்டியவை..!!

Anti-Ageing Tips: இன்றைய மோசமான வாழ்க்கை முறை காரணமாக, பொதுவாக 40 வயது கடந்தாலே, சரும ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, வயதான தோற்றம் ஏற்பட தொடங்குகிறது. இதனைத் தவிர்க்கவும், 40 வயது என்ன... 60 வயது ஆனால் கூட, சருமம் இளமையாக இருக்க சில உணவுகள் கை கொடுக்கும்.

சீரான வாழ்க்கை முறை, சிறப்பான உணவுப் பழக்கம், உங்களை நீண்ட நாள் இளமையாக வைத்திருக்க உதவும். எத்தனை வயதானாலும் சருமம் இளமையாக இருக்க, நமது உணவு முறையில் கவனம் செலுத்த வேண்டும்.

 

1 /9

Anti-Ageing Tips: நம்மை இளமையாக வைத்திருக்க, சருமத்தில் காணப்படும் கொலாஜன் என்ற தனிமம், அத்தியாவசியம். கொலாஜன் என்பது நம் உடலில் காணப்படும் இயற்கையான புரதம். இதனை கொடுக்கும் உணவு வகைகளை தவறாமல் உடலில் சேர்த்துக் கொள்வதால், என்றென்றும் இளமையாக இருக்கலாம்.

2 /9

பாதாம் பருப்பு: சரும செல்களை சேதத்தில் இருந்து பாதுகாத்து, இளமையான தோற்றத்தைக் கொடுக்கும் ஆற்றல் பாதாம் பருப்பிற்கு உண்டு.. இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், வைட்டமின் ஈ, ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ஆகியவை, சருமத்தை உள்ளிருந்து ஊட்டமாக வைத்திருக்கும்.

3 /9

மீன் உணவுகள்: ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த ஆதாரங்களான, சால்மன் மற்றும் துணை மீன் உணவுகள், சருமத்தில் ஏற்படும் அலர்ஜியை குறைத்து, சருமத்தை மென்மையாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்கும். சுருக்கங்கள் தோன்றாமல் இருக்கும்.  

4 /9

தக்காளி: சருமம் எப்போதும் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்க, தக்காளி உதவும். இதில் உள்ள லைகோபின் என்னும் ஆண்டி ஆக்சிடன்ட், சரும செல்கள் பாதிக்காமல் பாதுகாக்கிறது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், என்றென்றும் இளமையாக இருக்கலாம்.

5 /9

கீரை: கீரையில் உள்ள வைட்டமின் ஏ, சரும செல்கள் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதிலுள்ள வைட்டமின் சி கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. மேலும் சரும ஆரோக்கியத்திற்கு தேவையான இரும்புச்சத்து மற்றும் கோலியட்டும் இதில் அதிகம் உள்ளது. இவை சருமத்தை இளமையாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்கும்.  

6 /9

அவுரிநெல்லி: ப்ளூபெர்ரி என்னும் அவுரி நெல்லியில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் வைட்டமின் சி, உற்பத்தியை அதிகரித்து, சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல்களில் இருந்து பாதுகாக்கின்றன. இதனால் சருமம் இளமையாகவும் சுருக்கம் இல்லாமல், பளபளப்பாகவும் இருக்கும்.  

7 /9

புரத உணவுகள்: சருமத்தை இளமையாக வைத்திருக்க, டயட்டில் புரத உணவும் அவசியம். நமது உடலில் கொலாஜன் அளவை அதிகரிக்கவும் திசுக்களை உருவாக்கவும் புரதம் உதவுகிறது. அதிலும்,  தாவர அடிப்படையிலான புரதம் சருமத்திற்கு அதிக நன்மை பயக்கும். எனவே பருப்பு வகைகள், சோயா பீன்ஸ் போன்ற உணவுகள் அவசியம்

8 /9

இளமையை பாதுக்காக்க தவிர்க்க வேண்டியவை: வயதானாலும் இளைமையோடு இருக்க, சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களையும், முதுமை தோற்றத்தையும் ஏற்படுத்தக் கூடிய சில உணவுகள் பக்கம் போகக்கூடாது. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, பொரித்த உணவுகள், துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவை முதுமையை சீக்கிரம் வரவழைக்கும்

9 /9

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.