புதுடெல்லி: இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் டிசம்பர் 4, 2021 சனிக்கிழமை அன்று நிகழ உள்ளது. இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது. மதம் மற்றும் ஜோதிடத்தின் படி, சூரிய கிரகணத்தின் சூதக் காலம் செல்லாது என்றாலும், அதன் சுப மற்றும் அசுப பலன்கள் 12 ராசிகளுக்கும் இருக்கும். சூரிய கிரகணம்-சந்திர கிரகணம் மதம் மற்றும் ஜோதிடம் (Astrology Prediction) இரண்டிலும் அசுபமாக கருதப்பட்டாலும், இந்த கிரகணங்கள் ராசி அறிகுறிகளிலும் நல்ல விளைவைக் கொண்டுள்ளன. வரவிருக்கும் சூரிய கிரகணம் 7 ராசிக்காரர்களுக்கும் சாதகமாக அமையப் போகிறது. எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய கிரகணம் சுப பலன்களைத் தரும் என்று பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிஷபம் - ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய கிரகணம் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த கிரகணம் இந்த ராசிக்காரர்களுக்கு கௌரவத்தையும் மரியாதையையும் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். மொத்தத்தில், இந்த நேரம் பணம் மற்றும் தொழில் அடிப்படையில் நன்றாக இருக்கும்.


ALSO READ | மூன்றாம் உலகப்போர் 2022ல் வரும்! -நோஸ்ட்ராடாமஸ் கணிப்பு


மிதுனம் - இந்த நேரம் மிதுன ராசிக்காரர்களுக்கு பழைய சச்சரவுகளில் இருந்து விடுபடும். இது தவிர, அவரது விருப்பங்கள் ஏதேனும் நிறைவேறும் வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் நல்ல செய்திகளைப் பெறலாம்.


சிம்மம் - இந்த சூரிய கிரகணம் சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் தரும். அவர்களின் பழைய பிரச்சனைகள் சில தீரும். தடைபட்ட பணிகள் தற்போது தொடங்கும்.


கன்னி - சூரிய கிரகணம் கன்னி ராசிக்காரர்களுக்கு சுப பலன் தரும். இந்த நேரத்தில் தைரியமும் கூடும். இதன் மூலம் வேலை கிடைக்கும். பணி இடத்திலும் வெற்றி உண்டாகும்.


மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடுபவர்கள் தங்கள் தொழிலில் புதிய வாய்ப்புகளைப் பெறலாம். மொத்தத்தில், வருமானம் தொடர்பான ஆதாரங்களில் லாபகரமான சூழ்நிலை இருக்கும்.


கும்பம் - சூரிய கிரகணம் கும்ப ராசிக்காரர்களுக்கும் சுபமாக அமையும். இந்த காலகட்டத்தில் அவர்கள் திடீர் பண ஆதாயங்களைப் பெறலாம்.


(Disclaimer: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது.)


 


ALSO READ | கருடபுராணத்தின் இந்த 7 விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டால், நரகமும் வெகு தூரமே!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR