புதுடெல்லி: இந்து மதத்தின் முக்கிய நூல்களில் ஒன்றான கருட புராணத்தின் படி, நாம் வாழும்போது செய்யும் செயல்களின் பலன்கள் மரணத்திற்குப் பின்னரும் தொடரும் என்பது இந்துமத நம்பிக்கை. ஒருவர் தனது வாழ்க்கையில் நல்ல செயல்களைச் செய்தால், சொர்க்கமும், கெட்ட செயல்களில் ஈடுபட்டால், அவர் நரகத்தை அனுபவிக்க வேண்டும்.
கருடபுராணத்தின்படி கர்ப்பிணிப் பெண், கரு மற்றும் பிறந்த குழந்தையைக் கொல்பவர்களுக்கு நரகம் நிச்சயம். நரகத்திற்குச் செல்வதைத் தவிர்க்கும் சில விஷயங்கள் என்ன என்பதை தெரிந்துக் கொள்வோம்.
பிரார்த்தனை
கருட புராணத்தின் படி, நரகத்திலிருந்து தப்பிக்க, நரக சதுர்தசி நாளில், காளி தேவி, ஹனுமான் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணரை முறையாக வழிபட வேண்டும்.
சிறப்பு யாகங்கள்
பவுர்ணமி, அஷ்டமி, அமாவாசை ஆகிய நாட்களில் முறைப்படி யாகம் செய்வது நரகத்திலிருந்து விடுபட சிறந்த வழியாகும்.
விரதம்
விரதங்கள் இருப்பதால் (Keep Fasting) நரகத்திற்கு செல்லும் வழி அடைபடும் என்று கருடபுராணம் கூறுகிறது. கருட புராணத்தின் படி, சிவ சதுர்தசி, பிரதோஷம், ஏகாதசி ஆகிய நாட்களில் விரதம் இருப்பவர் நரக வேதனையைத் தவிர்க்கலாம்.
ALSO READ | ஜாதகத்தில் இந்த தோஷங்கள் பாடாய் படுத்தாமல் இருக்க பரிகாரங்கள்
மரங்களை நடுதல்
ஒருவன் தன் வாழ்வில் மூன்று நெல்லிக்காய் மரங்கள், ஐந்து மா மரங்கள், ஒரு வேப்பமரம், பத்து புளிய மரம் என மரங்கள் நட்டால் (Plant Tree) அவருக்கு நரகத்திற்குச் செல்லும் வழி அடைபடும். இவற்றைத் தவிர, வாழைமரம், துளசி உட்பட செடிகளை வளர்த்து வருவது நரகத்திற்கு செல்லும் பாதையை மூடிவிடும் என்று நம்பப்படுகிறது.
விஷ்ணு சஹஸ்ரநாமம்
தினமும் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வதன் மூலம் நரகம் செல்வதைத் தவிர்க்கலாம். புராணங்களின்படி, விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்வது ஒருவர் தவறான செயல்களை செய்வதில் இருந்து விடுவிக்கிறது. அதன் விளைவாக அவர் நரக வேதனையிலிருந்து காப்பாற்றப்படுகிறார்.
கங்கையில் நீராடுவது
பொதுவாக, கங்கையில் நீராடுவதற்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பௌர்ணமி நாளன்று கங்கையில் நீராடினால் நரகம் செல்வதில் இருந்து தப்பிக்கலாம் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
ராமாயண பாராயணம்
கருட புராணத்தின் படி, தினசரி ராமாயணத்தை படித்து வருபவர்கள் நரகத்திற்கு செல்ல மாட்டார்கள், அவர்கள் இறக்கும்போது வலிமிகுந்த மரணம் நிகழாது.
ALSO READ | இப்படிப்பட்ட விரல் கொண்டவரிடம் இருந்து விலகியிருக்கவும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR