ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) ஆண்டுதோறும் ஒன்றிய அரசின் துறைகளுக்கு தகுதி வாய்ந்த பணியாளர்களை பிரிவு B மற்றும் C பணிகளுக்கு போட்டித்தேர்வுகள் நடத்தி பணியமர்த்துகிறது. இந்த ஆண்டு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெரும்பாலான B பிரிவு பணிகளுக்கு பட்டப்படிப்பு முடித்த 20 முதல் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் Combined Graduate Level Examination (CGLE) போட்டித்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவற்றில் உதவி பிரிவு அலுவலர் (Assistant Section officer) பணியிடங்கள் ஒன்றிய அரசின் தலைமை செயலகம், மத்திய புலனாய்வுத்துறை, ரயில்வே துறை, வெளியுறவுத்துறை, பாதுகாப்புத் துறை, தலைமை அலுவலகம் ஆகியவற்றிற்கும் ஆய்வாளர் பணியிடங்கள் (Inspector) ஒன்றிய அரசின் வருவாய் துறைகளான Central Board of Direct Taxes, Central Board of In Direct Taxes & Customs, Directorate of Enforcement, Central Bureau of Narcotics ஆகியவற்றிலும் மற்றும் உதவியாளர் கண்காணிப்பாளர் (Assistant Superintendent) பணியிடங்கள் ஒன்றிய அரசின் அனைத்துத் துறைகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


மேலும் படிக்க | SBI Alert: கவனமாக இல்லையென்றால் முழு பணமும் காலி!! SBI விடுத்த எச்சரிக்கை


மேலும் C பிரிவு பணிகள் 12ஆம் வகுப்பு முடித்த 18 முதல் 27 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் Combined Higher Secondary Level (CHSL) தேர்வு மூலம் ஒன்றிய அரசின் அனைத்துத் துறைகளுக்கும் இளநிலை உதவியாளார் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு (Lower Division Clerks) தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும்,இப்பொதுப்பணிகள் தவிர Junior Engineer தேர்வு, Stenographer day, Sub Inspector in Delhi Police, Central Armed Police Force (CAPF), and Central Industrial Security Force (CIF) தேர்வுகளும் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.


மேற்கண்ட தேர்வுகளுக்கு நிலை 1-ல் பொதுவான போட்டித் தேர்வுகளுக்குரிய பாடத்திட்டங்களான General and Intelligence,   Reasoning, General Awareness, Quantitative Aptitude, English Comprehension பிரிவுகளில் இருந்து தான் வினாக்கள் கேட்கப்படுகிறது. நிலை 2-ல் Mathematics Abilities, Reasoning and General Intelligence, English, General Awareness and Computer Knowledge மற்றும் General studies பாடப்பிரிவுகளில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படுகிறது. இப்பாடப் பிரிவுகள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் அனைவரும் அறிந்த ஒன்றே!., 


எனவே, தமிழ்நாட்டு மாணவர்கள் ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் பெருமளவு பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில், மனிதள மேலாண்மைத் துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகிய துறைகள் இணைந்து, இத்தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் அனுபவம் மிக்க வல்லுநர்களை கொண்டு. ஒரு நாள் கருத்தரங்கம்
நாளை (அக். 9) அன்று சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் அரங்கில் காலை 9.30 மணி முதல் நடைபெறும். 


அரசு நடத்தும் ஆர்வமுள்ள இப்பயிற்சி முகாமில் போட்டித் தேர்வுகளில் ஆர்வமுள்ள இளைஞர்கள் கலந்துகொள்ளலாம். நேரில் வர இயலாத மாணவர்கள் இணையதளத்திலும் https://www.youtube.com/watch?v=ZTNqcXYp6QU அரசு கேபிள் டிவியிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் மற்றும் சமூக ஊடகங்களிலும் பதிவேற்றப்படும்.


மேலும் படிக்க | EPFO Update: உங்கள் பிஎஃப் கணக்கில் வட்டி வரவில்லையா? இதுதான் காரணம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ