Rasipalan 2021 செப்டம்பர் 06: இன்றைய ராசிபலன்; நினைத்த காரியம் கைகூடும்
சோதிடம் என்பது கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் கலை. இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டால் கவனமாக செயல்படலாம்
புதுடெல்லி: சோதிடம் என்பது கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் கலை. இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டால் கவனமாக செயல்படலாம்.
இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும்? நினைத்த காரியம் கைகூடுமா? புது முயற்சிகள் பலன் தருமா? தெரிந்துக் கொள்ளுங்கள்... எது எப்படியிருந்தாலும், நாள் என் செய்யும் கோள் என் செய்யும் என கடவுளை சரணாகதி அடைந்தால், எந்நாளும் நன்னாளே...
ராசிபலன் - 06-09-2021
மேஷம்: கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த வாக்குவாதங்கள் குறையும். எதிர்பாராத சில செலவுகள் ஏற்படும். வியாபார பணிகளில் லாபம் உண்டாகும். மனதில் இருந்துவந்த நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து புதிய வழிமுறைக்கு கொண்டு வருவீர்கள். மனதில் அஞ்ஞான சிந்தனைகள் அதிகரிக்கும்.
ரிஷபம்: உத்தியோக பணிகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் ஆரோக்கியமான விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் மற்றும் உத்தியோகம் சார்ந்த பயணங்களை மேற்கொள்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மனை சார்ந்த விஷயங்களில் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக முடிவெடுப்பது நல்லது.
மிதுனம்: மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கான சூழ்நிலைகள் அமையும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் புதிய முயற்சிகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். கடன் சார்ந்த நெருக்கடிகள் கட்டுப்பாட்டுக்குள் வரும்.
கடகம்: எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். பிள்ளைகளின் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். வழக்கு சார்ந்த பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். நுட்பமான சிந்தனைகளின் மூலம் வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். அதிகார பதவிகளில் இருப்பவர்கள் ஆதாயமடைவீர்கள்.
ALSO READ | இன்றைய பஞ்சாங்கம்: 2021 செப்டம்பர் 06, ஆவணி 21ம் நாள், திங்கட்கிழமை
சிம்மம்: விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உறவுகளிடம் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்துடன் செயல்படவும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எண்ணிய சில பணிகள் அலைச்சல்களுக்கு பின்பு நிறைவேறும்.
கன்னி: வீட்டை விரிவுப்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். வியாபார பணிகளில் இழுபறிகள் குறைந்து லாபங்கள் அதிகரிக்கும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். நிலுவையில் இருந்துவந்த சில பணிகளை செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்தவர்களின் சந்திப்புகள் மனதிற்கு ஒருவித மாற்றத்தை ஏற்படுத்தும்.
துலாம்: மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் நன்மைகள் ஏற்படும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். கலகலப்பான சூழ்நிலைகளின் மூலம் புத்துணர்ச்சி அடைவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
விருச்சிகம்: வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூரப் பயணங்களின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.
READ ALSO | ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை வணங்குவோம்
தனுசு: பேச்சுவன்மையின் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். உறவினர்களுக்கிடையே செல்வாக்கு அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகள் சாதகமாக நிறைவுபெறும். மற்றவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வும், அதற்கான உதவிகளும் ஏற்படும். வியாபார பணிகளில் நிலுவையில் இருந்துவந்த பொருட்களின் மூலம் லாபம் உண்டாகும்.
மகரம்: உடன்பிறந்தவர்களின் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். உங்களை பற்றிய புதுவிதமான புரிதல் ஏற்படும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பொறுமையை கடைபிடிக்கவும்.
கும்பம்: வியாபாரம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். வாழ்க்கைத்துணையின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். காணாமல் போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் சந்திப்புகள் உண்டாகும்.
மீனம்: வெளிவட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் அமையும். நெருக்கமானவர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். உத்தியோகத்தில் உங்கள் முயற்சிக்கேற்ப அங்கீகாரம் கிடைக்கும்.
Also Read | ஆலய வழிபாடு செய்வதன் தாத்பர்யம் என்ன தெரியுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR