புதுடெல்லி: சோதிடம் என்பது கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் கலை. இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டால் கவனமாக செயல்படலாம்.   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும்? நினைத்த காரியம் கைகூடுமா? புது முயற்சிகள் பலன் தருமா? தெரிந்துக் கொள்ளுங்கள்... எது எப்படியிருந்தாலும், நாள் என் செய்யும் கோள் என் செய்யும் என கடவுளை சரணாகதி அடைந்தால், எந்நாளும் நன்னாளே...    


ராசிபலன் - 23-10-2021


மேஷம்: தனவரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். வியாபார பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். கலை நுட்பமான செயல்பாடுகளின் மீது ஆர்வம் அதிகரிக்கும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். சுபிட்சமான நாள்.


ரிஷபம்: தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். புதிய பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வாகனம் வாங்குவது தொடர்பான உதவிகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் சுபவிரயங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள்.


மிதுனம்: சகோதரர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் எதையும் சமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை உண்டாகும். தொழில் மற்றும் வியாபார பணிகளில் இருந்துவந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள். தனவரவுக்கு மேல் தேவைகள் இருக்கும். புரிதல் அதிகரிக்கும் நாள்.


Also Read | பஞ்சாங்கம்: 2021 அக்டோபர் 23, ஐப்பசி 6ம் நாள், சனிக்கிழமை


கடகம்: வியாபார பணிகளில் புதிய அறிமுகம் ஏற்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வெளியூர் பயணங்களின் மூலம் லாபகரமான வாய்ப்புகள் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். புத்துணர்ச்சியான நாள்.


சிம்மம்: வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பெண்களுக்கு மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தைரியம் பிறக்கும். கலை சார்ந்த துறைகளில் அலைச்சல்கள் ஏற்படும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். தொழிற்கல்வி சார்ந்த செயல்பாடுகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். புதுமை பிறக்கும் நாள்.


கன்னி: குடும்பத்தில் உங்களின் பேச்சிற்கு மதிப்புகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். புதிய நபர்களின் மூலம் அனுபவம் அதிகரிக்கும். விவாதங்களின் மூலம் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கல்வி தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும். உங்களின் மீதான நம்பிக்கையில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். மதிப்புகள் அதிகரிக்கும் நாள்.


துலாம்: உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். எதிலும் பற்றற்ற தன்மையுடன் செயல்படுவீர்கள். தேவையற்ற சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் உண்டாகும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். உடனிருப்பவர்களின் தன்மைகளை அறிந்து கொள்வீர்கள். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். சேமிப்புகள் குறையும் நாள்.


ALSO READ | தசராவிற்கு 21 நாட்களுக்கு பிறகு தீபாவளி வருவதன் காரணம் இதுவே!


விருச்சிகம்: புதிய தொழில் தொடங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நண்பர்களின் வழியில் ஆதரவான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் கிடைக்கும். இனிமையான நாள்.


தனுசு: இழுபறியான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சாதுர்யமான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும். அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். பொறுப்புகள் அதிகரிக்கும் நாள்.


மகரம்: குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் பணிகளில் லாபம் மேம்படும். இழுபறியான பணிகளில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். தேவையற்ற பேச்சுக்களை குறைத்துக்கொள்வது நல்லது. எதிர்பாராத திடீர் மாற்றங்கள் உண்டாகும். நுட்பங்களை அறிந்து கொள்ளும் நாள்.


கும்பம்: உறவினர்களின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விருப்பமான நபர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். பயணங்கள் கைகூடும் நாள்.


மீனம்: செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதங்கள் நீங்கும். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழல் உண்டாகும். நெருக்கமானவர்களின் செயல்பாடுகள் சில நேரங்களில் மனவருத்தத்தை ஏற்படுத்தும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வெற்றிக்கு அடித்தளமிடும் நாள்.


ALSO READ | குளிகை நேரத்தில் என்ன செய்யலாம்? எதை தவிர்க்க வேண்டும்?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR