Rasipalan 19 April 2021: இன்றைய ராசிபலன் (19 ஏப்ரல் 2021) குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்
சோதிடம் என்பது கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் ஒரு கலை. இன்றைய நாள் நமக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டால் கவனமாக செயல்படலாம்.
புதுடெல்லி: சோதிடம் என்பது கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் ஒரு கலை. இன்றைய நாள் நமக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டால் கவனமாக செயல்படலாம்.
இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும்? நினைத்த காரியம் கைகூடுமா? புது முயற்சிகள் பலன் தருமா? தெரிந்துக் கொள்ளுங்கள்... எது எப்படியிருந்தாலும், நாள் என் செய்யும் கோள் என் செய்யும் என கடவுளை சரணாகதி அடைந்தால், எந்நாளும் நன்னாளே...
Also Read | ஆலய வழிபாடு செய்வதன் தாத்பர்யம் என்ன தெரியுமா?
மேஷம்: சிலருக்கு எதிர்பாராத உத்தியோக மாற்றம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முற்படுவீர்கள். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும். பணிபுரியும் இடங்களில் மேன்மையான சூழல் உண்டாகும்.
ரிஷபம்: மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். பொருட்களை கையாளுவதில் எச்சரிக்கையுடன் செயல்படவும். உயர் அதிகாரிகளிடம் ஆதரவான சூழல் ஏற்படும். பேச்சுக்களில் புத்துணர்ச்சி உண்டாகும். பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மிதுனம்:கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். நீண்ட நாட்களாக இருந்துவந்த துன்பங்கள் நீங்கும். சபைகளில் ஆதரவாக இருப்பவர்களின் உதவிகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். விருந்து, விசேஷங்களில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள்.
கடகம்: புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். அரசு அதிகாரிகளின் மூலம் சாதகமான சூழல் ஏற்படும். பிரபலமானவர்களின் ஆதரவு கிடைக்கும். ஊழியர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கடன் சார்ந்த சில பிரச்சனைகள் குறையும். பணிபுரியும் இடங்களில் சூழ்நிலையறிந்து செயல்பட வேண்டும்.
Also Read | Coronavirus Temple: தெய்வத்துக்கும் மாஸ்க், பக்தர்களுக்கு பிரசாதமும் Mask
சிம்மம்: புதுவிதமான அணுகுமுறைகளை மேற்கொள்வீர்கள். சில தவறுகளின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். பல நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். பிரிந்து சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேற்றம் அடைவீர்கள். மனதில் நினைத்த காரியங்களை நிறைவேற்றி கொள்வீர்கள்.
கன்னி: மனதிற்கு பிடித்த வாகனங்களை வாங்குவீர்கள். பொதுக்காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பயணங்களால் நன்மை ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வேலைக்கான முயற்சிகள் ஈடேறும்.
துலாம்: வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் அதிகரிக்கும். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். செயல்களில் துரிதம் உண்டாகும். மறைமுக விமர்சனங்கள் தோன்றி மறையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் மதிப்புகள் உயரும். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். மனம் தெளிவு பெறும்.
விருச்சிகம்: எந்தவொரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எண்ணிய செயல்களை முடிப்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். பழைய நினைவுகளால் மனவருத்தங்கள் ஏற்படும். சில செயல்களை செய்து முடிக்க அலைச்சல்கள் அதிகரிக்கும். வாகனப் பராமரிப்பு செலவுகள் நேரிடும்.
தனுசு: நெருக்கமானவர்களுடன் மனம்விட்டு பேசி பொழுதை கழிப்பீர்கள். தொழில் தொடர்பான கடன் உதவிகள் கிடைக்கும். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். வீர தீரமான செயல்களில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். மனை விருத்திக்கான பணியில் இருந்துவந்த இடர்பாடுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
Also Read | தல விருட்சம் பற்றிய சுவாரசியமான தகவல்கள், 8 புனித மரங்கள் கொண்ட கோவில் எது?
மகரம்: நண்பர்களின் மூலம் பொருளாதாரம் மேன்மை அடையும். வழக்குகள் தொடர்பான பிரச்சனைகள் குறையும். குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். சாதுர்யமான பேச்சுக்களால் அனைவரையும் கவர்வீர்கள். மனதிற்கு நெருங்கியவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். தைரியத்துடன் பொதுக்காரியங்களில் ஈடுபட்டு புகழ் பெறுவீர்கள்.
கும்பம்: உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். நட்பு வட்டாரம் விரிவடையும்.
மீனம்: மனதில் இருக்கும் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். புதிய பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். மனை வாங்கும் முயற்சிகள் கைகூடும். ஆடம்பர பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். தொழில் முதலீடுகள் தொடர்பான மனக்குழப்பங்கள் குறையும்.
Also Read | ஆசிர்வாதம் என்பதன் அடிப்படை என்ன? அது எவ்வாறு செல்வங்களைப் பெற வழி வகுக்கும்
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR