Coronavirus Temple: தெய்வத்துக்கும் மாஸ்க், பக்தர்களுக்கு பிரசாதமும் Mask

கொரோனா பரவலினால் உலகமே நிலை குலைந்து போயிருக்கிறது. வழக்கமான விஷயங்கள் அனைத்தும் மாறிப்போயிருக்கும் நிலையில் கடவுள்களும் தங்கள் வழக்கத்தை மாற்றிக் கொண்டுவிட்டன போலும். அன்னை துர்க்கைக்கும் (Goddess Durga) முகக்கவசம் போடப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Apr 18, 2021, 12:21 PM IST
  • கடவுளுக்கும் மாஸ்க்
  • மாஸ்கே பிரசாதம்
  • 5 பேர் மட்டுமே கோவிலுக்குள் செல்ல முடியும்
Coronavirus Temple: தெய்வத்துக்கும் மாஸ்க், பக்தர்களுக்கு பிரசாதமும் Mask title=

கொரோனா பரவலினால் உலகமே நிலை குலைந்து போயிருக்கிறது. வழக்கமான விஷயங்கள் அனைத்தும் மாறிப்போயிருக்கும் நிலையில் கடவுள்களும் தங்கள் வழக்கத்தை மாற்றிக் கொண்டுவிட்டன போலும். அன்னை துர்க்கைக்கும் (Goddess Durga) முகக்கவசம் போடப்பட்டுள்ளது.

ஒருகோவிலில் அன்னைக்கு மட்டுமல்ல, அங்கு வரும் பக்தர்களுக்கும் பூசாரி ‘முகக்கவசம்’ ‘பிரசாதமாக’ கொடுக்கிறார்.

ஆச்சரியம் இத்துடன் நிற்கவில்லை. கோவிலுக்குள் கோவிட் வழிகாட்டு நெறிமுறைகளும் கடைபிடிக்கப்படுவதாக ஆலய நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.

அதோடு, ஆலயத்திற்குள் ஒரே நேரத்தில் ஐந்து பக்தர்களுக்கு மேல் அனுமதிக்கப்படுவதில்லை. 
காலையிலும் மாலையிலும் 'ஆரத்தி' காட்டும் சமயத்தில் "சமூக இடைவெளி” விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன" என்று பூசாரி கூறினார்.

Also Read | இன்றைய பஞ்சாங்கம் 17 ஏப்ரல் 2021

கொரோனா (Coronavirus)  அதிவேகத்தில் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், உத்தரபிரதேசத்தின் எட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு ஆலயம் பின்பற்றும் நடைமுறைகள் தான் இவை. துர்கா தேவியின் சிலைக்கு முகக்கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிந்திருக்கும் அன்னையைப் பற்றி கோவில் பூசாரி மனோஜ் சர்மா என்ன சொல்கிறார் தெரியுமா?

ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருவதால், அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தவே அன்னைக்கு முகக்கவசம் போடப்பட்டுள்ளதாக கூறுகிறார்.

பக்தியோடு வரும் பக்தர்களிடையே கோவிட் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக முகக்கவசங்களை பிரசாதமாக விநியோகித்து வருகிறோம். அதோடு கைகளை சுத்தப்படுத்திக் கொள்வதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளோம் என்று அவர் கூறுகிறார்.

Also Read | பித்ரு தோஷம் நீங்க ஒருமுறை பரிகாரம் செய்தால் போதுமா?

அதோடு கோவில் (Temple) வளாகத்தில் பல இடங்களில் கோவிட் -19 ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் ஆலயத்திற்கு வருவதால் பொது சுகாதாரத்திற்கு ஆபத்து ஏற்படக்கூடாது என்பதை உறுதி செய்ய விரும்புகிறோம். அதோடு, பக்தர்கள் பொறுப்புள்ள குடிமக்களாக நடந்துகொள்வதையும் உறுதிசெய்கிறோம் என்று கோயில் பூசாரி கூறுகிறார்.

அனைத்து கோவிட் வழிகாட்டு நெறிமுறைகளும் கடைபிடிக்கப்படுவதையும், ஒரே நேரத்தில் ஐந்து பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதையும் ஆலய நிர்வாகம் உறுதி செய்கிறது.  

Also Read | கலையைப் பாதுகாக்க அரசின் ஆதரவைக் கோரும் சவுராஷ்டிரா கைத்தறி நெசவாளர்கள்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News