தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் (DCPU) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. Social Worker, Assistant Cum Data Entry Operator ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காலி பணியிட விவரம்:


திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் (DCPU) Social Worker, மற்றும் Assistant Cum Data Entry Operator ஆகிய பணிகளுக்கு தலா 01 பணியிட வீதம் மொத்தமாக 02 பணியிடங்கள் காலியாக உள்ளன.


கல்வித் தகுதி:


Social Worker பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate அல்லது Post Graduate Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் Social Work, Guidance and Counselling, Psychology போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree பெற்றவராக இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும்.


மேலும் படிக்க | Job alert: டெல்லி அரசு வேலைவாய்ப்பு: இது டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் ஆட்சேர்ப்பு 2022


Assistant Cum Data Entry Operator பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் ஆங்கிலம் / தமிழில் தட்டச்சு செய்வதில் Senior Grade சான்றிதழ் பெற்றவராக மற்றும் கணிப்பொறி இயங்குவதில் அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும்.


முன் அனுபவ விவரம்:


Social Worker பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சார்ந்த பணிகளில் 2 வருடம் அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.


வயது வரம்பு:


Social Worker பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 40 வயது என DCPU நிறுவனத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


ஊதிய விவரம்:


Social Worker பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.14,000 மாத ஊதியமாக பெறுவார்கள்


Assistant Cum Data Entry Operator பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.9,000 மாத ஊதியமாக பெறுவார்கள்.


தேர்வு செய்யப்படும் முறை:


இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் வழிமுறை:


இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் https://drive.google.com/file/d/18V1L2Q3cykjJfFFl9Fvq_paE-YOeH9Wl/view என்ற இணையதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து;


மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு. அறை எண்  311, மூன்றாவது தளம்,மாவட்ட ஆட்சியர் இணைப்பு கட்டடம்; திருவாரூர் - 610004 என்ற முகவரிக்கு  24ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR