Job alert: டெல்லி அரசு வேலைவாய்ப்பு: இது டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் ஆட்சேர்ப்பு 2022

டெல்லி மேம்பாட்டு ஆணையத்தில் உதவி இயக்குநர், ஜூனியர் இன்ஜினியர் (சிவில்), ஜூனியர் இன்ஜினியர் (எலக்ட்ரிகல்/ மாக்) பி, புரோகிராமர், ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறை தொடங்கிவிட்டது.  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 18, 2022, 04:55 PM IST
  • டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் ஆட்சேர்ப்பு
  • 279 காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு
  • அருமையான சம்பளத்தில் அரசு வேலை
Job alert: டெல்லி அரசு வேலைவாய்ப்பு: இது டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் ஆட்சேர்ப்பு 2022 title=

DDA Recruitment 2022: டெல்லி மேம்பாட்டு ஆணையத்தில் உதவி இயக்குநர், ஜூனியர் இன்ஜினியர் (சிவில்), ஜூனியர் இன்ஜினியர் (எலக்ட்ரிகல்/ மாக்) பி, புரோகிராமர், ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறை தொடங்கிவிட்டது.  

விண்ணப்பத் தாக்கல் ஜூன் 11ஆம் தேதி தொடங்கியது

டெல்லி மேம்பாட்டு ஆணையத்தில் பணிபுரிய விரும்புவர்கள், வேலை தொடர்பான கூடுதல் தகவலுக்கு, டெல்லி மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பை படித்து தெளிவாக புரிந்துக் கொண்ட பிறகு விண்ணப்பிக்கவும்.  

இந்த பணீகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் DDA இன் அதிகாரப்பூர்வ இணையதளமான dda.gov.inவுக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க | JOB ALERT: IDBI வங்கியில் வேலைவாய்ப்பு... தகுதியுடையவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூலை 10ஆம் தேதி கடைசி நாளாகும். இந்த ஆட்சேர்ப்பு செயல்முறையின் கீழ் மொத்தம் 279 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

விண்ணப்ப செயல்முறை 11 ஜூன் 2022 முதல் தொடங்கப்பட்டது. லேண்ட்ஸ்கேப் ஆர்க்கிடெக்சரில் முதுகலை டிப்ளமோ பட்டம் பெற்றவர்கள் இந்த பணிகளுகு விண்ணப்பிக்கலாம். அதோடு, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது தாவரவியல் அல்லது விவசாயம் அல்லது தோட்டக்கலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் படிக்க | NABARD Recruitment: நபார்ட் வங்கியில் பணிபுரிய அரிய வாய்ப்பு!

விண்ணப்பக் கட்டணம் மற்றும் வயது வரம்பு விவரங்கள்

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 1000 செலுத்த வேண்டும். வெவ்வேறு பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான வயது வரம்பு மாறுபடுகிறது. அதேபோல கல்வித்தகுதியும் பணிகளுக்கு ஏற்றாற்போல வித்தியாசப்படுகிறது.

உதவி இயக்குநருக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 35 ஆகவும், புரோகிராமர், ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் மற்றும் திட்டமிடல் உதவியாளருக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தது 30 ஆகவும் இருக்க வேண்டும்.

மேலும் படிக்க | ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணிகளுக்கான வேலைவாய்ப்பு: 12 லட்ச ரூபாய் சம்பளத்தில் பணி

மேலும் படிக்க | தமிழ் படித்தவர்களுக்கு TNPSC ஆணையத்தில் அதிக சம்பளத்தில் வேலை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News